இதையும் ஃபேக் டிரெய்லர்னு கம்பு சுத்துங்க பார்க்கலாம்!.. ஆபாச வசனம் பேசும் விஜய்.. வெளுத்த ப்ளூ சட்டை!..

by Saranya M |   ( Updated:2023-10-05 09:52:47  )
இதையும் ஃபேக் டிரெய்லர்னு கம்பு சுத்துங்க பார்க்கலாம்!.. ஆபாச வசனம் பேசும் விஜய்.. வெளுத்த ப்ளூ சட்டை!..
X

லியோ படத்தில் பெண்களை குறிவைத்து பல ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் சென்சார் படக்குழுவினர் மியூட் செய்திருப்பதாக காலையில் இருந்து ஒரு சென்சார் சர்டிபிகேட் வைரலாகி வந்த நிலையில், அது ஃபேக் சென்சார் விஜய் அப்படியெல்லாம் ஆபாசமாக பேச மாட்டார் என விஜய் ரசிகர்கள் கம்பு சுத்தி வந்தனர்.

இந்நிலையில், லியோ படத்தின் டிரெய்லரிலேயே தே எனும் வார்த்தையில் தொடங்கும் அந்த கெட்டவார்த்தையை விஜய் பேசியதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் இதுவும் ஃபேக் டிரெய்லரா என விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னடா தீபாவளியே வந்த மாதிரி இருக்கு!.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்!.. லியோ டிரெய்லர் எப்படி இருக்கு?..

மாஸ்டர், விக்ரம் படங்களின் ட்ரெய்லரிலும் கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெப்சீரிஸில் மோசமான ஆபாச வசனங்கள் அப்படியே எடிட் செய்யாமல் இடம்பெறும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக இப்படி வசனங்களை தமிழ் சினிமா இயக்குநர்களும் வைத்து வருவதாக விமர்சனங்களும் கூறப்படுகின்றன.

இந்நிலையில், லியோ படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், லியோ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்கிற கேள்வியையும் லியோ படத்தின் டிரெய்லரும் ஃபேக் தானா என சொல்லுங்கள் என்றும் அடி வெளுத்து வருகிறார்.

இதையும் படிங்க: சும்மா தீயா இருக்கு!.. வெறித்தனமா வேட்டையாடும் விஜய்!. லியோ டிரெய்லர் வீடியோ…

ஜெயிலர் பட சமயத்தில் விஜய்க்கு சொம்பு அடிப்பது போல பேசி விஜய் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த ப்ளூ சட்டை மாறன் இப்போ லியோ படத்துக்கு தனது நெகட்டிவிட்டியை கக்க ஆரம்பித்துள்ளார்.

புகை, ஆபாச வசனம், கொலை, ரத்தம் என இத்தனை வயலென்ஸ் இருக்கும் திரைப்படத்திற்கு எப்படி யு/ஏ சான்றிதழ் தணிக்கை குழு கொடுத்தது என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Next Story