Connect with us

Cinema News

என்னடா தீபாவளியே வந்த மாதிரி இருக்கு!.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்!.. லியோ டிரெய்லர் எப்படி இருக்கு?..

கைதி, மாஸ்டர், விக்ரம் எல்லாம் என்ன படம் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பீஸ்ட் படத்தை கேஜிஎஃப் 2 தமிழ்நாட்டுக்கு வந்தே வச்சு செய்த நிலையில், நாமும் அப்படியொரு படத்தை கொடுக்க முடியாதா என்கிற வெறிதான் இப்படியொரு பேடாஸ் படத்தை விஜய் உருவாக்க காரணமே என்கின்றனர்.

இதையும் படிங்க: சும்மா தீயா இருக்கு!.. வெறித்தனமா வேட்டையாடும் விஜய்!. லியோ டிரெய்லர் வீடியோ…

பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என டபுள் ரோலில் விஜய்யை காட்டுகின்றனர். ஆனால், டிரெய்லர் முழுவதும் சஸ்பென்ஸை காத்து வருவது தான் படத்திற்கு தேவையான ட்விஸ்ட்டாகவும் ஹை பாயின்ட்டாகவும்  உள்ளது.

கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதே போல ஒரு படத்தைத் தான் விஜய்க்கும் கிண்டி கொடுக்கப் போகிறாரா என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் தனது குடும்பத்தை காப்பாற்ற ஒரு தந்தை வீறு கொண்ட வேங்கையாக எழுந்தால் எப்படி இருக்கும் என்கிற கதையை படமாக கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: பண்டிகைய கொண்டாடிடலாமா… லியோ ட்ரைலருக்கே இத்தனை அலப்பறையா…! மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்!

லியோ தாஸ் மற்றும் பார்த்திபன் இருவருமே ஒரே ஆளாக இருந்தாலும் சரி இல்லை டபுள் ஆக்‌ஷனாக இருந்தாலும் சரி படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் பந்தயம் அடிக்கும் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள உழைப்பை பார்த்தாலே தெரிகிறது.

ஆடியோ லான்ச் ரத்தானால் என்ன? தளபதியின் ட்ரெய்லர் வந்தாலே தாறுமாறு ப்ரோமோஷனை செய்து விடும் என்பதற்கு எடுத்துக் காட்டாக லியோ திரைப்படம் உள்ளது ரசிகர்களுக்கு ஆயுத பூஜைக்கே தீபாவளி வந்தது போல் அல்லாமல், இன்றைக்கே தீபாவளியை கொடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ் என்றும் இந்த ஒரு ட்ரெய்லருக்கே 200 ரூபாயை தாராளமாக ஒரு சினிமா ரசிகன் கொடுக்கலாம். அந்தளவுக்கு செம வொர்த்தான மேக்கிங்கில் படம் உருவாக்கப்பட்டு இருப்பது அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்டை லோடு செய்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இதையும் படிங்க: போட்றா வெடிய!.. லியோ ரிலீஸ் தேதியில் திடீர் டிவிஸ்ட்!.. பி ரெடி விஜய் ஃபேன்ஸ்!…

ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸுக்கு விரைவில் ரெஸ்ட் இன் பீஸ் போடப் போகிறார் லியோ விஜய் என்பதை ட்ரெய்லர் மூலம் தெளிவாக சொல்லி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை துப்பாக்கி மற்றும் கத்தி சத்தத்திலேயே காதுக்குள் சென்று என்ன என்னவோ செய்கிறது.

சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், த்ரிஷா, கெளதம் மேனன் உள்ளிட்டோரின் நடிப்பு மிரட்டலின் உச்சம். லியோ டிரெய்லர் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களையே திருப்திப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top