Connect with us

Cinema News

பண்டிகைய கொண்டாடிடலாமா… லியோ ட்ரைலருக்கே இத்தனை அலப்பறையா…! மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்!

Leo Trailer: விஜயின் லியோ ட்ரைலர் ரிலீஸ் இன்று நடக்க இருக்கும் நிலையில் விஜய்ரசிகர்கள் செய்த வேலையால் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். இப்போ தெரியுதா ஏன் ஆடியோ ரிலீஸ் நின்னுச்சு என பலரும் பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு பலரையும் எகிற வைத்து இருக்கிறது. லோகேஷ் இயத்தில் இதுவரை எல்லா படங்களுமே ஹிட் படம் தான் என்பதால் அந்த சைடும் விஜயிற்கு சாதகமாகவே இருக்கிறது. மேலும் கதையும் வலுவானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்த மிஷ்கினா மாறிய கெளதம் மேனன்!.. சும்மா இருக்காரா பாருங்க!.. லியோ அப்டேட் கொடுக்குறாராம்!..

வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜூன் என்பதே பெரிய கூட்டணி. இதனால் விஜயின் கேரக்டருக்கு வலு சேர்க்க முடியும் என லியோ பேச்சுக்கள் தான் எல்லா பக்கமும் அடிப்பட்டு வருகிறது. படத்தின் ரிலீஸ் நெருங்கிவிட்டதால் தயாரிப்பு நிறுவனமும் தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு விஜயின் ட்ரைலர் ரிலீஸ் நடக்க இருக்கிறது. என்ன யூட்யூப்பில் வரும் வீடியோவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் எனக் கேட்கலாம். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே திரையரங்குகள் ட்ரைலரை திரையிடும். அதிலும் லியோ படத்துக்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு இருப்பதால் இன்னும் பெரிய திரையரங்குகள் கூட இன்று ட்ரைலரை ரிலீஸ் செய்ய இருக்கிறது.

இதனை ஒரு விழாவாகவே விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு திரையரங்கு வாசலிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு ட்ரைலருக்கே என்றால் விஜய் வரும் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்து இருக்கும்.

இதையும் படிங்க: போட்றா வெடிய!.. லியோ ரிலீஸ் தேதியில் திடீர் டிவிஸ்ட்!.. பி ரெடி விஜய் ஃபேன்ஸ்!…

இதனால் தான் படக்குழு முன்னவே யோசிச்சு நிறுத்திட்டாங்க போல என பேசி வருகின்றனர். 6.30 மணிக்கு வெளியாக இருக்கும் லியோ ட்ரைலருக்கு பலரும் வெயிட் செய்து வருகின்றனர். மீண்டும் விஜயின் சாதனை, லோகேஷின் மேஜிக் என பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top