Connect with us

Cinema News

பால் அபிஷேகம் செய்ய மாட்டோம்!.. முதல்ல நீங்க இத செய்யாம இருங்கடா!… விஜய் ரசிகர்களை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

லியோ படத்துக்கு சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்றே தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமே காலையில் பால் வாகனங்கள் செல்லும் போது, அதிலிருந்து பாலை திருடி ரசிகர்கள் கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்து அட்டகாசம் செய்வார்கள் என்பதால் தான் எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில், தியேட்டர் சீட்களையே தாறுமாறாக உடைத்து ரவுடித்தனம் செய்த விஜய் ரசிகர்கள் திடீரென திருந்தியது போல லியோ படத்தின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய மாட்டோம் என்கிற உறுதிமொழியை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பொன்மேனி உருகுது!.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டும் அயலான் ஹீரோயின்.. அத்தனையும் அழகு தான்!..

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிவிப்பும் வெளியாகி உள்ள நிலையில், அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர்களை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

”பக்கத்து சீட்ல இருக்கறவங்க நிம்மதியா படம் பாக்கறதுக்கு.. நீங்க வெறித்தனமா கத்தாம இருந்தா இன்னும் சிறப்பா இருக்கும். இந்த நாகரீகத்தை மத்த நடிகரின் ரசிகர்களும் கடைப்பிடிச்சாத்தான் பொதுமக்களுக்கு நிம்மதி.” என ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்துள்ளார்.

இதையும் படிங்க: பேடாஸும்மா.. ஐமேக்ஸ்மா!.. அடிபொலி.. அடுத்து அடுத்து ஹைப்பை எகிற வைக்கும் லியோ டீம்!..

”கத்தாம கப் சிப்னனு இருக்க வேண்டும் என்றால் தங்களைப் போன்றுதான் படம் எடுக்க வேண்டும்… என்ன சொல்ல எல்லாரும் தூங்கிடிவாங்கள் அப்புறம் எப்புடி சத்தம் வரும்…” என விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை பதிலுக்கு போட்டு பொளந்து வருகின்றனர்.

லியோ படம் ரிலீஸுக்கு முன்பாக அனைத்து திரையரங்குகளும் இன்சூரன்ஸ் செய்து வைத்து விடுவது நல்லது என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 2 நிமிட ட்ரெய்லருக்கே ரோகிணி தியேட்டர் காலி, 2 மணி நேரம் 43 நிமிட படம் அதிலும் செகண்ட் ஹாஃப் முழுக்க தீயாக இருக்கும்னு புரமோஷன் வேற, தியேட்டர்கள் தப்பித்து அடுத்த ஷோவுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு படம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் நல்லா இருக்கும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top