விஜய் பட வீடியோ வரும்போது என் போட்டோ வரணும்!.. அஜித்தை பங்கம் செய்த பிரபலம்!..

by சிவா |
vijay ajith
X

விஜய், அஜித் இருவருமே சம காலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடிக்க துவங்கி பின்னாளில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியவர்கள். ஒருகட்டத்தில் இருவருமே மாஸ் நடிகர்களாக மாறினார்கள். இதனால் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

ஒருபக்கம் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். இப்போது சமூகவலைத்தளங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் டிவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். அசிங்கமாக ஹேஷ்டேக் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து சந்தோஷப்படும் நிலைக்கு அவர்களின் மனநிலை மாறிவிட்டது.

இதையும் படிங்க: டபுள் ஆக்‌ஷனில் தெறிக்கவிட்ட விஜய்!.. இந்த வருஷத்தோட வெயிட்டான சம்பவமாக மாறும் கோட்!.. செம சீன்!..

ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவரை திட்ட வேண்டாம் என அஜித் அறிக்கையே விட்டார். ஆனால், அவரின் ரசிகர்கள் அதை கேட்பதில்லை. அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே போட்டி என்பது பல வருடங்களாக இருக்கிறது. மறைமுகமாக அஜித்தை திட்டி விஜய் வசனம் பேசுவார். ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?’ என அஜித் படத்தில் பாடல் வரிகள் வரும்.

ajith

விஜயின் வாரிசு படம் வெளியான போது வேண்டுமென்றே அப்போது என் படமும் வரவேண்டும் என சொல்லி துணிவு படத்தை களமிறக்கினார் அஜித். விஜய் படம் தொடர்பான அப்டேட், டீசர், டிரெய்லர் என எது வெளியானலும், அதை மறக்கடிக்க அஜித் படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியாகும். பெரும்பாலும் அஜித்தின் போட்டோ எதாவது வெளியாகும்.

இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்துள்ள கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று இரவு வெளியானது. மேலும், அப்படத்தின் செகண்ட் சிங்கிளும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட சில புதிய புகைப்படங்களை அஜித் தரப்பு களமிறக்கி இருக்கிறது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

ajith

இதைத்தொடர்ந்து யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது. அதான் ஆடியோ லான்ச், அவார்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் போறது இல்ல. ஆனா வருசத்துக்கு 365 போட்டோ மட்டும் சோஷியல் மீடியால வரணும். குறிப்பா விஜய் படத்தோட ட்ரைலர் வர்றப்ப, ஆடியோ லாஞ்ச், ரிலீஸ் தேதி, பர்த் டே டைம்ல.‌. என் ஃபோட்டோ வந்தாகனும். என பதிவிட்டு விஜயை கிண்டலடித்திருக்கிறார்.

Next Story