ஜெயிச்சா ஹீரோ!.. பிரச்சனைனா டைரக்டர்!. வெளங்கும்டா!.. ஜீவாவை பொளக்கும் புளூசட்ட மாறன்!…

Published on: January 19, 2026
jiiva
---Advertisement---

நடிகை ஜீவாவின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில். சுருக்கமாக ஆங்கிலத்தில் TTT என தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஜனநாயகன் வெளியாகவில்லை.. வெளியான பராசக்தி படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஏதோ ஒரு வகையில் அனைத்து தரப்பினரையும் கவர பராசக்தி படம் தவறிவிட்டது. எனவே அந்த படம் ஓடிய பல தியேட்டர்களில் இப்போது TTT படத்தை போட்டுவிட்டார்கள். இந்த படத்திற்கு அதிக வசூலும் கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் கரூர் சம்பவத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய ‘படிச்சி படிச்சி சொன்னேனடா.. கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு’ என்கிற வசனத்தை ஜீவா பேசியிருக்கிறார். இந்த வசனத்தை ஜீவா பேசும்போது தியேட்டர்களும் கைத்தட்டல்களும், விசிலும் பறக்கிறது.

இதற்கு திமுக ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஜீவா ‘யாரையும் காயப்படுத்தும் என்கிற உள்நோக்கத்தோடு இதை செய்யவில்லை.. ஒரு ஜாலிக்காக மட்டுமே செய்தோம். ஒரு ட்ரெண்டிங்காக செய்தோம்’ என்று விளக்கமளித்திருந்தார். மேலும் ‘இந்த வசனத்தை பேச சொன்னது இயக்குனர்தான்.. நீங்கள் அவரைத்தான் கேட்க வேண்டும்’ என்றும் செய்தியாளிடம் சொன்னார்.

இதையடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் ‘பழியை தூக்கி இயக்குனர் மீது போட்டுவிட்டார் ஜீவா.. படம் ஹிட் அடித்தால் ஹீரோ காரணம்.. சம்பளமும் பல கோடி அதிகமாகும்.. அதுவே தோற்றாலோ, சர்ச்சை வந்தாலோ இயக்குனர்தான் காரணம்.. விளங்கும்டா கோடம்பாக்கம்’ என பதிவிட்டிருக்கிறார்.