அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா?!.. பராசக்தி இயக்குனரை பொளந்த புளூசட்ட மாறன்…

Published on: January 14, 2026
bluesatta
---Advertisement---

ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு போட்டியாக பராசக்தி படம் வெளியாகிறது என அறிவிப்பு வெளியானதும் அது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஜனவரி 14-ம் தேதி தான் பராசக்தியை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென ஜனவரி 10ம் தேதியே படம் வெளியாகும் என அறிவிப்பு வந்ததும் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே விஜயோடு மோதுகிறார்.. ஜனநாயகன் படத்தில் வசூலை குறைக்கவே இது போல நடந்து கொள்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் கோபப்பட்டார்கள்.

இதுபற்றி சிவகார்த்திகேயன் விளக்கமளிளித்தும் விஜய் ரசிகர்கள் தங்களை மனதை மாற்றிக் கொள்ளவில்லை. ஒருபக்கம் ஜனநாயகன் படமும் சென்சார் பிரச்சனையில் சிக்கி வெளியாகவில்லை இதனால் விஜய் ரசிகர்களின் மொத்த கோபமும் பராசக்தி படம் இது திரும்பியது.. எனவே படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப துவங்கினார்கள்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா விஜய் ரசிகர்கள் ரவுடிகளை போலவும், குண்டர்களை போலவும் நடந்து கொள்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் பராசக்தி படத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய்யான விமர்சனங்களை பரப்புகிறார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ‘படம் ஓடவில்லை என்றால் பலியை தூக்கி சமூக வலைதளங்கள் மற்றும் விமர்சனங்கள் மீது போடுவது தமிழ் சினிமாவில் வழக்கமாகிவிட்டது.. படத்தில் நாம் என்ன தவறு செய்தோம் என சுயபரிசோதனை செய்யவே மாட்டார்கள்.. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று வந்தபோது இனித்த மக்கள் இப்போது சகக்கிறார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.