பாய்ண்ட் வரட்டும்..! பாய்ண்ட் வரட்டும்..! சூடு பிடிக்கும் ஞானவேல்-அமீர் விவகாரம்… கம்முனு இருக்கும் சூர்யா - கார்த்தி..!

by Akhilan |
பாய்ண்ட் வரட்டும்..! பாய்ண்ட் வரட்டும்..! சூடு பிடிக்கும் ஞானவேல்-அமீர் விவகாரம்… கம்முனு இருக்கும் சூர்யா - கார்த்தி..!
X

GnanavelRaja-Ameer: தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்துக்காக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து ஞானவேல் மற்றும் அமீர் சண்டை உச்சத்தினை அடைந்து இருக்கிறது. இதில் தொடர்ச்சியாக அமீருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அமீர் தனக்கு பருத்திவீரன் படத்தால் 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்ல விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து பேட்டி கொடுத்து நிறைய விஷயங்களை அமீர் சொல்ல கோலிவுட்டில் புது பூகம்பம் வெடித்தது. இதை தொடர்ந்து ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்தார்.

இதையும் படிங்க: நல்லா கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. விஜே பார்வதிக்கு போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..

அந்த பேட்டியில் 2016ல் இருந்து அமீர் எங்களைப் பற்றி மோசமாக தான் தொடர்ந்து பேசி வருகிறார். நாங்கள் அதுகுறித்து எதுவுமே பேசவில்லை. இதற்கு காரணம் சிவகுமார் ஐயா தான். அவரிடம் அமீர் பேட்டியில் எங்களை குறித்தும் உங்களை குறித்தும் அவதூறாக பேசி வருவதாக சொன்னோம்.

அப்போ அவர் இரண்டு பேருமே மீடியாவில் யாருடன் நல்லவர் என்பதை நிரூபிக்க போகிறீர்கள். உங்க இயக்குனரை தப்பாகவே பேசக்கூடாது. நீனும், அமீரும் சினிமாவில் இருக்க தான் போகிறீர்கள். உங்களை பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார் என ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்து இருந்தார்.

மேலும், நான் தான் அமீரை சூர்யா குடும்பத்தினரிடம் இருந்து பிரித்தேன் என்கிறார். ஆனால் நந்தா படத்தில் சூர்யாவை மோசமாக நடத்தினார் அமீர். அதனால் அவருக்கும் சூர்யாவுக்கும் மனகசப்பு ஏற்பட்டது. இதனால் நந்தா படத்தின் இசைவெளியீட்டிற்கே சூர்யா வரவில்லை என்றார்.

இதையும் படிங்க: எடுக்கிறதெல்லாம் குடும்ப சித்திரம்!.. நிஜத்தில் கில்மாத்தனம் – சீனுராமசாமியை விளாசும் ப்ளூ சட்டை மாறன்

இதையடுத்து அமீரும் முதுகில் குத்தினாலும் நிமிர்ந்து தான் நிற்பேன் எனப் பேசி இருந்தார். இதனால் அவருக்கு சினிமா இயக்குனர் தொடர்ச்சியாக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சசிகுமாரில் தொடங்கி சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா ஆகியோர் ஓபனாகவே தங்களுடைய ஆதரவை ட்வீட் செய்து வருகின்றனர்.

ஆனால் ஞானவேல் ராஜா தரப்புக்கு இதுவரை யாருமே ஆதரவாக சொல்லவில்லை. சம்மந்தப்பட்ட சூர்யா, கார்த்தி கூட இதுகுறித்து பேசாமலே இருந்து வருகின்றனர். இதை கலாய்க்கும் விதமாக ப்ளூசட்டை மாறன் தன்னுடைய ட்வீட்டில் பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும் எனக் கமெண்ட் செய்து இருக்கிறார்.

Next Story