அஜித் சம்பளம் இத்தனை கோடியா? உருட்டுனாலும் நியாயம் வேணாமாப்பா! கலாய்த்த புளூசட்டை மாறன்

Ajithkumar: தமிழ்சினிமாவில் தற்போது யாருக்கு அதிக சம்பளம் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் வேட்டையனுக்கு அதிக சம்பளம் வாங்கினார். ஆனால் கோட்டுக்கு விஜயிற்கே அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற தகவலும் வெளிவந்தது.
இவர்கள் இருவருமே கடைசியாக நடித்தது ஜெயிலர் மற்றும் லியோ என்ற ஹிட் படத்தினால் 200 கோடி வரை சொல்லப்படும் இவர்கள் சம்பளம் கூட கொஞ்சம் ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது. அஜித்துக்கு எதுக்குப்பா இவ்வளோ சம்பளம் என சிலர் இணையத்தில் கலாய்த்து வந்தனர்.
இதையும் படிங்க: தலைவன் வேற ரகம்! இன்னும் காஷ்மீரில் குளிர்காயும் அண்ணாச்சி.. மாத்தியோசி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ
சமீபத்தில் கூட அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கீழ் நடிக்கும் படத்துக்கு 163 கோடி கேட்டதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வந்தது. அதுக்கு காரணம் அவருக்கு ராசி நம்பர் 1 எனவும் வலைபேச்சு வீடியோவில் தகவல் இருந்தது. ஆனால் தற்போது அஜித் நடிக்கும் 63வது படத்துக்கு அவருக்கு கிட்டத்தட்ட 303 கோடி ரூபாய் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவலை தன்னுடைய போஸ்ட்டில் வெளியிட்டு இருக்கும் புளூசட்ட மாறன் ஏன் 606 கோடினு போட்டுக்கோங்களே எனவும் கலாய்த்து இருக்கிறார். இந்த பதிவுக்கு கீழ் அஜித்தை ரசிகர்கள் சரமாரியாக கலாய்க்கின்றனர். அடுத்த மூணு படத்துக்கு வாங்கி இருப்பார் எனவும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!