Connect with us
mgr

Cinema History

எம்.ஜி.ஆரின் நடிப்பை பார்த்து நக்கலடித்த இயக்குனர்!.. நொறுங்கிப்போன பொன்மன செம்மல்!..

ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து சுமார் 30 வருடங்கள் நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடினார். சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடவில்லை.

பல அவமானங்களையும், கிண்டல்களையும் சந்தித்தார். ஒருவழியாக சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போதும் கூட படப்பிடிப்பு தளங்களில் அவரை அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்களும், இயக்குனர்களும் அவமானப்படுத்துவது என்பது பலமுறை நடந்துள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!…

எம்.ஜி.ஆர் நன்றாக வாள் வீசி சண்டை போடுவார். ஹீரோவை விட எம்.ஜி.ஆர் நன்றாக சண்டை செய்தால் பேர் அவருக்கு போய்விடும் என நினைத்து சில ஹீரோக்கள் அவரின் காட்சிகளை குறைக்க சொன்ன சம்பவம் கூட நடந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டித்தான் எம்.ஜி.ஆர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

எம்.ஜி.ஆர் வாய்ப்பு தேடி அலைந்தபோது நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் அவரை பாலிவுட் பட இயக்குனர் நஸ்வர்லால் ஜஸ்வன்பாட் என்பவரிடம் அழைத்து சென்று ‘இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ எனக்கேட்டார். பொன் நிறமும், புன்னகையும் மிளிர, கண்களில் கனவோடு நின்ற எம்.ஜி.ஆரை மேலும் கீழும் பார்த்த இயக்குனர் ‘எங்கே நடித்துக்காட்டு!’ என சொல்ல எம்.ஜி.ஆரும் நடித்து காட்டினார்.

இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

அவர் நடிப்பை பார்த்துவிட்டு ‘Well decrated mythology pillar’ என கமெண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். அதற்கு என்ன அர்த்தம் என எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் என இருவருக்குமே தெரியவில்லை. ஏனெனில் இருவருக்கு அவ்வளவு ஆங்கில அறிவு இல்லை. அவர் போனபின் அருகிலிருந்த இயக்குனரின் உதவியாளரிடம் இதுபற்றி கேட்டபோது ‘நன்றாக அலங்கரிக்கப்பட்ட புராதான தூண்’ என அர்த்தம் என அவர் சொல்ல எம்.ஜி.ஆர் உடைந்து போய்விட்டார். அவரை சமாதானம் செய்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘விடப்பா.. அவன் வடக்கத்திக்காரன். அவனுக்கு உன்னப்பத்தி என்ன தெரியும்… நீ உன் நடிப்பை செழுமைப்படுத்து.. நீயூம் உன்னை மேம்படுத்திக்கொள்’ என சொல்ல எம்.ஜி.ஆர் ஆறுதலடைந்தார்.

அதன்பின் ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி, நாடோடி மன்னன் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி தனக்கு ஒரு ரூட்டை பிடித்து பயணித்து தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையாக மாறினார். மக்களின் ஆதரவோடு அரசியலிலும் நுழைந்து தமிழக முதல்வராகவும் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்.. ஆனாலும் நடிப்பை பார்த்து மிரண்டு போய் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை..

google news
Continue Reading

More in Cinema History

To Top