100 கோடி அப்பு... டிராகன் வசூல் 100 கோடி... முதல்நாளை விட எகிறி அடித்த 10வது நாள் வசூல்!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் தற்போது தமிழ்த்திரை உலகில் சக்கை போடு போட்டு வருகிறது, இந்த ஆண்டில் 100 கோடியை எட்டியுள்ள முதல் பிளாக்பஸ்டர் படமாகி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் தரமான கதை அம்சம் உள்ள படங்களைக் கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற வைத்து விடுவார்கள்.
சின்ன பட்ஜெட்: அது சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அஜீத்தின் விடாமுயற்சியே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் சின்ன பட்ஜெட் படங்களான மதகஜராஜாவும், டிராகனும் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது.
ஆரோக்கியமான விஷயம்: சாதாரணமாக நாள்கள் செல்லச் செல்ல வசூல் கணிசமாகக் குறையும். ஆனால் டிராகன் படம் விஸ்வரூபம் எடுத்துள்ளது இன்டஸ்ட்ரியிலேயே ஆச்சரியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான். அப்போதுதான் இதுபோன்ற பல நல்ல படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
லவ் டுடே படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். இப்போது வெளியாகி உள்ள டிராகன் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு சூப்பர்.
பெரும் வரவேற்பு: பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெசேஜைச் சொன்னது. அதனாலேயே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறுக்கு வழியில் போனால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என்றே பலரும் நினைப்பார்கள். அதனால் அவர்கள் பாதையிலேயே பயணம் செய்கிறான் ஹீரோ.
ஆனால் கடைசியில் ஜெயிப்பது நேர்மைதான் என்பதே கதை. குறிப்பாக இந்தத் தேர்வுகாலத்தில் மாணவர்களின் படிப்பைப் பற்றிப் படம் பேசுகிறது. நேர்வழியில் பயணித்து அரியர்ஸ் போடலைன்னா ஹீரோ எப்படி முன்னேறி இருக்கலாம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.
10 நாள் வசூல்: இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.8கோடி, 5வது நாள் 5.1 கோடி, 6வது நாள் 5.2 கோடி, 7வது நாள் 4.15 கோடி. ஆக மொத்தம் 50.3கோடி. 8வது நாள் வசூல் 4.7, 9 நாளில் 8.5கோடி, 10வது நாளில் 9கோடி. என மொத்தம் மொத்தம் 72.50 கோடியை இந்திய அளவிலேயே வசூலித்துள்ளது.
உலகளவில் டிராகன் இன்னும் சில தினங்களுக்கு முன்பே 100கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று சொன்னோம். அதே போல நேற்று 10வது நாளில் பாக்ஸ் ஆபீஸ்ல உலகளவில் கலெக்ஷன்ல இருந்து டிராகன் கதற கதற பிளாக்பஸ்டர் 100 கோடி வசூல் என அறிவிச்சிட்டாங்க.