2002ம் வருடம் வெளியான காந்தாரா 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி வசூலை அள்ளியது. இந்த படத்தை கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் படத்தின் இரண்டாம் பாகத்தை Kantara Chapter 1 என்கிற தலைப்பில் ரிஷப் ஷெட்டி உருவாக்கினார்.
முதல் பாகம் அதிக வசூலை பெற்றதால் இரண்டாம் பாகத்தை 100 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை மிகவும் பிரமாண்டமாக உருவாக்கினார்கள். இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், போர் காட்சிகளும், VFX காட்சிகளும் கைத்தட்டலை பெற்றது. கடந்த 2ம் தேதி இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழியில் வெளியானது.
முதல் பாகம் ஹிட்டு என்பதால் இரண்டாம் பாகத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. எனவே முதல் நாளிலிருந்தே இப்படம் நல்ல வசூலை பெற துவங்கியது. முதல் 3 நாளிலேயே இப்படம் இந்தியாவில் 162.85 கோடியை வசூல் செய்தது. நான்காம் நாளான நேற்று இப்படம் 60 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. அதாவது கடந்த நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் இப்படம் 223.25 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. உலக அளவில் 300 கோடி வசூலை தொட்டிருக்கிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் மொத்த வசூலையும் நான்கு நாட்களில் காந்தாரா 2 4 நாட்களில் முறியடித்து விட்டது. அதேபோல் கேஜிஎப் முதல் பாகத்தின் வசூலையும் காந்தாரா 2 தாண்டி இருக்கிறது. முதல் நான்கு நாட்களில் இப்படம் 300 கோடி வசூலை தாண்டி இருக்கும் நிலையில் கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடலாம் என கணிக்கப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பேன் இண்டியா அளவில் ஒரு படம் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டுமெனில் அப்படம் ஹிந்தியில் நல்ல வசூலை பெற வேண்டும். பாகுபலி 2, KGF 2, RRR, புஷ்பா, புஷ்பா 2, கல்கி போன்ற படங்கள் அப்படித்தான் வசூலை அள்ளியது. அந்த வகையில் காந்தாரா 2 இந்தி மொழியிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. கன்னட சினிமா உலகில் kgf, kgf2, kantara ஆகிய 3 படங்களுக்கு பின் காந்தாரா 2 படத்தின் வசூல் பென்ச் மார்க்காக அமைந்திருக்கிறது.
