Rajinikanth: கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினி. கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ரஜினி கடந்த 40 வருடங்களாக சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தோடு வலம் வருகிறார். ஏனெனில், தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவரின் படங்களே அதிக வசூலை பெறும். அதேநேரம், பாபா படத்தில் துவங்கி அண்ணாத்த வரைக்கும் அவருக்கு சில படங்கள் சரியாக அமையவில்லை. எனவேதான், சிலர் விஜயை சூப்பர்ஸ்டார் என பேச துவங்கினார்கள்.

ரஜினி சொந்த காசை போட்டு அவரே கதை எழுதி ஆசை, ஆசையாக நடித்த பாபா படம் ஓடவில்லை. இதனால், வினியோகஸ்தர்களுக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்தது. அதன்பின் குசேலன், லிங்கா, தர்பார், அண்ணாத்த, லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் ரஜினிக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இடையில் எந்திரன், 2.0, சிவாஜி, பேட்ட, ஜெயிலர் ஆகிய படங்கள் அவருக்கு வெற்றி பெற்றது. அதிலும், ஜெயிலர் படம் உலகம் முழுவதும் சேர்த்து 650 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து ரஜினிக்கு கம்பேக் படமாக அமைந்துவிட்டது. ரஜினி படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நல்ல வசூலை பெறுவதுண்டு. அந்தவகையில், ரஜினியின் கடைசி 5 படங்கள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநிலங்களில் எவ்வளவு வசூலை பெற்றது என பார்ப்போம்.

ஆந்திராவை பொறுத்தவரை வேட்டையன் படம் 20.60 கோடியையும், ஜெயிலர் படம் 84.45 கோடியையும், அண்ணாத்த படம் 7.20 கோடியையும், தர்பார் 19.25 கோடியையும், பேட்ட படம் 12.25 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. இதில், ஜெயிலர் படம் ஆந்திராவில் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

கேரளாவை பொறுத்தவரை வேட்டையன் படம் 16.95 கோடியையும், ஜெயிலர் படம் 57.70 கோடியையும், அண்ணாத்த படம் 2.55 கோடியையும், தர்பார் படம் 8.05 கோடியையும், பேட்ட படம் 8.60 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. ரஜினி லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவிட்டு இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கூலி படம் ரிலீஸுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தொட்ட நிலையில் இப்படம் எப்படியும் 1000 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் கூலி படமே ரஜினி படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கும். கூலி படத்தின் வியாபாரத்தை பார்த்துவிட்டுதான் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.