Parasakthi movie: ஒரு திரைப்படம் உருவாகும்போது சில பிரசச்னைகள் வரலாம். சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபடும். பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி முக்கிய காரணமாக அமையும். அல்லது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அதைவிட்டுவிட்டு அந்த படத்தின் ஹீரோ வேறு படத்தில் நடிக்கப்போய்விட்டால் ஷூட்டிங் நடக்காது.
இல்லையெனில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை அல்லது ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான பிரச்சனை என எதாவது ஒன்று இருக்கும். ஆனால், பராசக்தி படத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டு தலைவலியாக மாறியிருக்கிறது.
சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலரும் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது. சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடந்தநிலையில் இலங்கை சென்று சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என்பதால் சிவகார்த்திகேயன் புதிய தோற்றத்துக்கு மாறியிருந்தார்.
இந்த படம் தொடர்பான போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்தபோதுதான் இப்படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஷ்கரனை அமலாக்கத்துறை நெருங்கியது. இது தெரிந்ததும் அவர் எங்கோ தலைமறைவாகி விட்டார்.
எனவே, பராசக்தி படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே, சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த மதராஸி படத்தில் நடிக்கப்போனார். இந்நிலையில், பராசக்தி படத்திற்கு வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மதராஸி பட படப்பிடிப்பு இந்த மாதம் முடிவடையவுள்ளது. இது முடிந்ததும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில், பராசக்தி படக்குழுவுக்கு கொடுக்க வேண்டியிருந்த மொத்த சம்பளத்தையும் டான் பிக்சர்ஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுவிட்டதாம். எனவே, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகளில் பராசக்தி டீம் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…