Categories: Cinema News latest news

அதெப்படி திமிங்கலம்!.. குப்பையை அள்ளி குப்பை மேலயே போடுறாரு.. விஜய் பெயரை தொடர்ந்து டேமேஜ் பண்றாங்களே!..

நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டாலும் வெளியிட்டார். தொடர்ந்து அவரது பெயரை கெடுக்கவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கி விட்டனர் என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் களத்தில் இறங்கி வேலை பார்க்கிறேன் என போட்ட சீன் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை ஒட்டுமொத்தமாக வச்சு செய்து விட்டது. அதிலும், ஏரிக்களை ஆட்டையைப் போட்டு வீடுகள், பீனிக்ஸ் மால், பல நட்சத்திர ஹோட்டல்கள் என கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த வேளச்சேரி மக்களின் நிலை இன்னமும் சீரடையவில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே ஒரு போட்டோ!.. ஒட்டுமொத்த விஜய் இமேஜும் க்ளோஸ்.. அமைதியா இருங்கடா அப்ரசண்டிகளா!..

பள்ளிக்கரணை, முடிச்சூர், எண்ணூர் என பல தாழ்வான பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை. வேளச்சேரியில் திடீரென உடைந்து விழுந்த ஃபைவ் ஃபர்லாங் சாலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி திரை போட்டு நடந்து வருகிறது.

இந்நிலையில், மக்களுக்கான பணியில் விஜய் மக்கள் இயக்கம் ஈடுபட வேண்டும் என விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது ஒருவர் விஜய் போட்டோவை வைத்துக் கொண்டு முன்னாடி நடந்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்தன.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு சிகிச்சை ஓவர்!.. மருத்துவமனை அப்டேட் இதோ!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

ஈசிஆர் சரவணன் வைரலாகி விட்டாரே, இப்போ பாரு என் ஆட்டத்தை என நினைத்த புஸ்ஸி ஆனந்த் தன் பங்குக்கு குப்பையை சுத்தம் செய்கிறேன் என பக்கா அரசியல்வாதியை போல குப்பை அதிகம் உள்ள இடத்தில் இருந்து குப்பையை அள்ளி அதன் மேலே கொட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு நடிகர் விஜய் எப்படித்தான் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரோ என ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

 

Published by
Saranya M