மார்க் ஆண்டனி-யில் சில்க் வேடத்தில் நடித்த நடிகை யார் தெரியுமா? படத்த ஓட்ட என்னெல்லாம் பண்ண வேண்டிருக்கு!

by Rohini |   ( Updated:2023-09-07 07:11:01  )
silk
X

silk

Actor Vishal: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபகாலமாக இவரின் படங்களுக்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில் இவருடைய மார்கெட்டே சரியும் நிலையில் இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடிக் கொண்டே வருகிறார் விஷால்.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தில் அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : சீரியல்ல மட்டும்தான் இழுத்து மூடுவேன்!.. இது எப்படி இருக்கு!.. ரசிகர்களை சூடேத்தும் ரச்சிதா!..

படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தளவுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர். மேலும் படத்தில் ஒரு ஐட்டம் பாடல் ஒன்றும் இருக்கின்றது. அந்த பாடலில் ஆடியிருப்பது சில்க் மாதிரியே இருக்கும் ஒரு நடிகை.

பார்ப்பதற்கு அச்சு அசலாக சில்க் மாதிரியே இருக்கிறார். 80கள் காலகட்டத்தில் ஒரு படம் ஓட வேண்டுமென்றால் சில்க் நடனத்தை சேர்த்து விடுங்கள் என்று கூறுவார்கள். அந்தளவுக்கு முன்னனி நடிகைகளை விட சில்க்கிற்கு தான் அதிக மவுசு இருந்தது.

இதையும் படிங்க : பாலிவுட்டில் பலித்ததா அட்லியின் காப்பி மேஜிக்!.. ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கு?..

அதே போல் தான் மார்க் ஆண்டனி படத்தை புரோமோட் செய்வதற்கு இந்த நடிகையை அழைத்து வந்து நடிக்க வைத்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சில்க் மாதிரி இருக்கும் நடிகையை ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்களாம்.

இப்பொழுதுதான் ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் ஒருவரை போல இன்னொருவரை உருவாக்கி விடுகிறார்கள். அதே போல் தான் இந்தப் படத்திலும் ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்திதான் சில்க்கை உருவாக்கியிருக்கிறார்களாம்.

இதையும் படிங்க : கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?

Next Story