More
Categories: Cinema News latest news

கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா? இளையராஜா பயோபிக்கை விமர்சித்த பிரபலம்!…

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் தொடங்கியதில் இருந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பிரபல விமர்சகர் கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, கனெக்ட் மீடியா தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கும் இளையராஜா படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: முத்துவை வச்சு பெருசா ப்ளான் போடும் ஸ்ருதி குடும்பம்… நடக்குமா? ரோகினி மாட்டுவாங்களா இல்லையா?

இப்படத்துக்கு கமல் திரைக்கதை எழுத இருக்கிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அந்த வகையில் பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறுகையில், இளையராஜா ஒரு கடல். அவரின் வாழ்க்கையை இரண்டு மணி நேரத்துக்குள் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அவ்வளோ பெரிய ஜாம்பவான் அவர். அவர் வாழ்க்கையை எப்படி குறைத்து தரப்போகிறார்கள்.

இளையராஜாவை இன்று கடவுளாக பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் உண்மை சம்பவம் முழுவதும் நிறைந்த கதையாக இது இருக்குமா என்பது சந்தேகம் தான். இங்கு அவரின் பாசிட்டிவ் பக்கங்களாக மட்டுமே இருக்கும். அவரின் ஆரம்பகாலத்துக்கே பெரிய வரலாறு இருக்கிறது. அதை படமாக எடுத்தாலே போதும். ஆனால் இதை அருண் மாதேஸ்வரன் எப்படி எடுக்க போகிறார் என்பதும் சந்தேகம் தான்.

இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..

முதலில் சென்னை வந்தது பாரதிராஜா தான். அவர் நான் ஜெயிச்சதும் உங்களை அழைச்சிக்கிறேன் என்கிறார். சென்னையில் வந்து ரொம்பவே சிக்கனமாக வாழ்ந்தார். இருந்தும் தன் நண்பர்கள் தன்னை அசிங்கப்படுத்த கூடாது என்பதற்காக பெருமையாக லெட்டர் போடுவாராம். அதை நம்பி உடனே இளையராஜா, ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் கிளம்பி வந்துவிடுகின்றனர்.

அந்த காலக்கட்டமே மிகப்பெரிய சுவாரஸ்யத்தினை கொண்டு இருந்தது. ஆனால் அதை அருண் மாதேஸ்வரன் செய்வாரா? கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா என்ற கேள்விகளும் எழுந்துவிட்டது. முதலில் மாரி செல்வராஜை தான் தனுஷ் பரிந்துரைத்தாராம். ஆனால் இளையராஜா சாதிக்காரராக சேர்ந்து இருக்கிறார்கள் என பேசிவிடுவார்கள் என மறுத்துவிட்டாராம்.

அதையடுத்தே அருண் மாதேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கு அவருக்கு பெரிய வேலைகள் இருக்காது. இளையராஜாவே தேவையானவற்றை செய்துவிடுவார். இருந்தும் அருண் மாதேஸ்வரன் செய்ய போவதை நினைத்து கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:  சூடுபிடிக்கும் செழியன் – ஜெனி பிரச்னை… ஆத்தாடி முடிச்சி விட போறாங்க போல! தப்பிச்சோம்..

Published by
Akhilan

Recent Posts