கேப்டன் கொடுத்த இன்பதிர்ச்சி! நினைச்சுக் கூட பார்க்காத அளவுக்கு பொன்னம்பலத்துக்கு கிடைச்ச கிஃப்ட்

by Rohini |
viji
X

viji

Actor Ponnambalam: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒருவரை பார்த்தாலே பயப்படும் அளவுக்கு வில்லன் ரோலில் கலக்கியிருக்கிறார் என்றால் அது நடிகர் பொன்னம்பலம்தான். அவரின் வாட்டசாட்டமான உடல் வாகு, உயரமான தோற்றம் என வில்லனுக்கே உரிய எல்லா தகுதிகளும் பொன்னம்பலத்திடம் இருந்தன.

அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு பொன்னம்பலத்துக்கு கிடைத்தது. அதுவும் நாட்டாமை படத்தில் யாரும் எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பொன்னம்பலம். அதுவும் தாய்க்கிழவி என்ற வார்த்தையே பொன்னம்பலத்தால்தான் பிரபலமானது.

இதையும் படிங்க: டைட்டிலில் இப்படி ஒரு சிக்கலா? அலட்சியப்படுத்திய பாலா.. இனிமே ‘வணங்கான்’ இல்லயாம்

ஆனால் ஆரம்பகாலங்களில் சினிமாவில் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் பொன்னம்பலம். கிட்டத்தட்ட 25 வருடத்திற்கும் மேலாக இந்த துறையில் இருக்கும் பொன்னம்பலம் சத்யராஜ், விஜயகாந்த், பிரபு போன்ற முன்னனி நடிகர்களுக்கு மெயின் வில்லனாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக விஜயகாந்த் நடித்த பல படங்களில் பொன்னம்பலம் நடித்திருக்கிறார்.தொழிலையும் தாண்டி விஜயகாந்த் பல வகைகளில் பொன்னம்பலத்திற்கு உதவி செய்திருக்கிறார். பணப்பிரச்சினையில் பொன்னம்பலம் இருக்கும் போதெல்லாம் முதல் ஆளாக அவருக்கு உதவியர் விஜயகாந்த்தான்.

இதையும் படிங்க: என்னை கைகாட்டி சிவாஜி பேசியதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… ரமேஷ் கண்ணா கொடுத்த ஆச்சரிய தகவல்

இந்த நிலையில் விஜயகாந்த் பொன்னம்பலம் பற்றிய மற்றுமொரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு வருடமாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்த பொன்னம்பலத்தை எஸ்.ஏ.சி அவருடைய அலுவலகத்திற்கு வர சொன்னாராம்.

அங்கே வந்த பொன்னம்பலத்திடம் எஸ்.ஏ.சி ‘விஜயகாந்த் சொல்லிட்டார். இதுதான் உன்னுடைய ரோல்’ என செந்தூரப்பாண்டி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சரி சம்பளமாக 50000 ரூபாய் கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பொன்னம்பலத்துக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அங்கு அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட தொகை 2 லட்சமாம். இதற்கெல்லாம் காரணம் விஜயகாந்த் என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க: மேலிடத்தில் இருந்து வந்த ஒரே ஒரு மெயில்! ஆடிப்போன ‘அமரன்’ படக்குழு.. இப்போ என்ன பண்ணுவாங்க?

Next Story