Categories: Cinema News latest news

என்னங்கடா நம்ம ஆதி குணசேகரனுக்கு வந்த சோதனை!… கேப்டன் மில்லர் என் கதை தான்… திருடி இருக்காங்க…

Vela Ramamoorthy: எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி நடிகர் வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். அவரும் ஒரு பெரிய எழுத்தாளரும் கூட. தற்போது அவரின் ஒரு கதையை பிரபல கேப்டன் மில்லர் திருடி இருப்பதாக புகார் அளித்து இருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் பொங்கல் ரிலீஸாக வெளிவந்தது. கிட்டத்தட்ட நல்ல ரீச்சையே படம் கொடுத்தது.

Also Read

இதையும் படிங்க: அச்சு அசல் அப்படியே இருக்காரே! இவர் இல்லைனா தனுஷ் இல்ல – வைரலாகும் டூப் நடிகரின் புகைப்படம்

100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கும் திரைப்படம் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது. நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வரும் இப்படம் தற்போது ஒரு பெரும் சிக்கலில் சிக்கி இருக்கிறது. அதாவது வேல ராமமூர்த்தி எழுதிய பட்டத்து யானை நாவலின் கதையை தான் திருடி கேப்டன் மில்லர் எடுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தார். அதுவே பிரச்னையாகி இருந்த நிலையில், தற்போது தன்னுடைய நாவலை சமர்பித்து புகாரையும் கொடுத்து இருக்கிறார்.

மன்னர் ஆட்சியில் கடுப்பாகி பிரிட்டிஷ் ஆர்மியில் இணையும் ஹீரோக்கு மக்களை சுடும் வேலை கொடுக்கப்படுகிறது. அதில் மனம் வெறுத்த ஹீரோ மீண்டும் ஊருக்கே திரும்ப அவர்கள் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் புரட்சி கூட்டத்துடன் இணைந்து பிரிட்டிஷை எதிர்ப்பதே கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஃபிளைட்ல ஹன்சிகா பண்ண வேலை!.. சொல்லி சொல்லி சிரிக்கும் சிவகார்த்திகேயன்…

Published by
Akhilan