Cinema History
200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..
கேப்டன் விஜயகாந்த் நடித்து 200 நாள்களைக் கடந்தும், அதை நெருங்கியும் ஓடிய படங்களின் லிஸ்டை இப்போது பார்ப்போம். 80 காலகட்டங்களில் விஜயகாந்த் படங்கள் கமல், ரஜினியின் படங்களுக்கே டஃப் கொடுக்கும். அவ்ளோ சூப்பராக இருக்கும். ரஜினி, கமல் ரசிகர்களும் விஜயகாந்த் படங்களைப் பார்க்க வருவார்கள்.
படத்தில் பாட்டும், பைட்டும் சூப்பராக இருக்கும். அது மட்டுமல்லாமல் சென்டிமென்ட், காமெடியும் செம மாஸாக இருக்கும். அதனால் தாய்க்குலங்களின் ஆதரவும் விஜயகாந்த் படங்களுக்கு எப்போதும் உண்டு. இவரது நடிப்பில் 200 நாள்களுக்கு மேலும், 200 நாள்களும், அதை நெருங்கியும் ஓடிய படங்களின் லிஸ்ட்டைப் பார்ப்போமா…
1981ல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை 185 நாள்களும், 1984ல் வெளியான வைதேகி காத்திருந்தாள் 200 நாள்களும், 1986ல் வெளியான அம்மன் கோவில் கிழக்காலே 174 நாள்களும், 1986ல் வெளியான ஊமை விழிகள் 185நாள்களும் ஓடி சாதனை படைத்தன. இந்தப் படங்கள் எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
படங்கள் ஓடுவதற்கு முக்கியமான காரணம் அப்போதெல்லாம் ஒரு ரசிகனுக்கு அந்தப்படம் பிடித்து விட்டால் அவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்ப்பான். அதனால் தான் அந்தக் காலகட்டங்களில் 200 நாள்கள் எல்லாம் படங்கள் சர்வ சாதாரணமாக ஓடியது.
அடுத்ததாக 1987ல் வெளியான நினைவே ஒரு சங்கீதம் 200 நாள்களும், அதே ஆண்டு வெளியான சட்டம் ஒரு விளையாட்டு 165 நாள்களும், அதே ஆண்டில் வெளியான உழவன் மகன் 175 நாள்களும், அதே ஆண்டில் வெளியான கூலிக்காரன் 165 நாள்களும், 1988ல் வெளியான நல்லவன் 184 நாள்களும், அதே ஆண்டில் வெளியான செந்தூரப்பூவே 175 நாள்களும், 1994ல் வெளியான என் ஆசை மச்சான் 185 நாள்களும் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றன.
இதையும் படிங்க… விஜயகாந்தை வைத்து 18 படங்கள்!.. கேப்டனை ஸ்டாராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர்..
அடுத்ததாக 1989ல் வெளியான பாட்டுக்கு ஒரு தலைவன் 168 நாள்களும், அதே ஆண்டில் வெளியான பொன்மனச்செல்வன் 165 நாள்களும், 1999ல் வெளியான கண்ணுபட போகுதய்யா 165 நாள்களும், 1990ல் வெளியான சத்ரியன் 185 நாள்களும், அதே ஆண்டில் வெளியான புலன் விசாரணை 175 நாள்களும், 1991ல் வெளியான மாநகர காவல் 185 நாள்களும், 1991ல் வெளியான விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் 300 நாள்களும் ஓடி சாதனை படைத்தன.
அதே போல, 1992ல் வெளியான சின்னக்கவுண்டர் 280 நாள்களும், அதே ஆண்டில் வெளியான பரதன் 166 நாள்களும், 1993ல் வெளியான ஏழைஜாதி 175 நாள்களும், அதே ஆண்டில் வெளியான செந்தூரப்பாண்டி 165 நாள்களும், 1994ல் வெளியான சேதுபதி ஐபிஎஸ் 185 நாள்களும், 2000த்தில் வெளியான வல்லரசு 185 நாள்களும், அதே ஆண்டில் வெளியான வானத்தைப் போல 200 நாள்களும், 2001ல் வெளியான வாஞ்சிநாதன் 155 நாள்களும், 2002ல் வெளியான ரமணா 200 நாள்களும், 2001ல் வெளியான தவசி 175 நாள்களும் ஓடி சாதனை படைத்தன.