பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ- எண்ட்ரி கொடுத்த சாச்சனா!.. என்னதாம்பா நடக்குது!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:46  )

Biggboss Tamil: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 8வது சீசனை எட்டி இருக்கிறது. இதுவரை 7 சீசன்களையும் கமல்ஹாசனே நடத்திய நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். கமல் அளவுக்கு விஜய் சேதுபதி திறமையாக நிகழ்ச்சியை நடத்துவாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

ஆனால், முதல் நாள் போட்டியாளார்களை அறிமுகம் செய்து வைத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும்போதே ஸ்கோர் செய்தார் விஜய் சேதுபதி. எனவே, வார இறுதியில் அவர் வரும்போது நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை 18 போட்டியாளர்கள் உள்ளே போயிருக்கிறார்கள்.

வழக்கம்போல் இந்த முறையும் அதிக அளவில் விஜய் டிவி பிரபலங்களை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் உள்ளே இருக்கிறார்கள். இதுபோக தயாரிப்பாளர் ரவீந்தர் என சிலர் இருக்கிறார்கள். இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு போனவர்களில் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனாவும் ஒருவர்.

உள்ளே போவதற்கு முன் விஜய் சேதுபதியை 'அப்பா' என சாச்சனா அழைக்க ‘என்னை அப்பான்னு கூப்பிடு.. சார்னு கூப்பிடு. ஆனா, ஒழுங்கா விளையாடாம வீக் எண்ட்ல வந்து அப்பான்னு ஒப்பாரி வைக்கக் கூடாது’ என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.

ஆனால், உள்ளே போனவுடன் ‘ஆண்கள் நம்மை டார்க்கெட் செய்து எலிமினேஷனில் நாமினேட் செய்தால் நான் முதள் ஆளாக வெளியே போக தயாராக இருக்கிறேன்’ என சாச்சனா கூறினார். இதையடுத்து பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் நாளே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார் சாச்சனா.

இதையடுத்து ‘அவருக்கு நேரம் கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு விஜய் டிவி அவரை வெளியேற்றி விட்டது’ என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டார்கள். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் சாச்சனா. இந்தமுறை தனது விளையாட்டை சாச்சனா ஒழுங்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story