பிக்பாஸ் தமிழ் போட்டியாளரின் திடீர் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:02  )

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் முன்னாள் போட்டியாளரின் திடீர் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் தொடங்கி தற்போது வரை எட்டு சீசன்கள் முடிந்து இருக்கிறது. முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஏழாவது சீசனில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால் அதற்கு முந்தைய ஏழு சீசன்களும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரபரப்பையும், ஆரவாரத்தையும் கொடுத்தது என்பதை உண்மை.

ஏனெனில் அதுவரை சீசன் களில் எந்த போட்டியாளர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதோ அவரை டைட்டிலை தட்டிச் செல்வார். ஆனால் பிக் பாஸ் சீசன் 6 மட்டுமே நெகட்டிவ் விமர்சனங்களையும் அதிகமாக குறித்த அசீம் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார்.

இது பின்னால் கமல்ஹாசனால் கூட விமர்சிக்கப்பட்டது. இவருக்கு எதிராக ரசிகர்களிடம் பெருமளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த விக்ரமன் ரன்னர் அப்பாக மாறினார். நிகழ்ச்சிக்கு பின்னர் வின்னர் அசீம் குறித்து அவர் நேரடியாகவே நிகழ்ச்சியில் தாக்கி பேசினார்.

இந்நிலையில் விக்ரமன் திடீர் திருமணம் செய்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு அன்பும் அறனும் என அவர் கொடுத்திருக்கும் கேப்ஷனும் வைரலாகி வருகிறது.

சில மாதங்கள் முன்னர் விக்ரமன் காதலி அவர் குறித்து வெளிப்படையாக வைத்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைரலானது. ஆனால் அதன் பின்னர் அது குறித்து என்ன தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story