Biggboss Tamil: இவல்லாம் படிச்சா பொண்ணா? ரவுடி மாதிரி நடந்துக்குறா...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:39  )

Biggboss Tamil : பிக்பாஸ் வீட்டில் அமைதியின் திருவுருவாக இருந்த சவுந்தர்யா தற்போது சமூக வலைதளங்களின் டாக் ஆப் தி டவுனாக மாறியிருக்கிறார். இந்த வாரம் வீட்டின் கேப்டனாக சத்யா தேர்வு செய்யப்பட்டார். உடல்ரீதியான போட்டி என்பதால் இரண்டாவது முறையாக சத்யா கேப்டனாகி இருக்கிறார்.

கேப்டனாக முடிவினை எடுக்க சத்யா காலம் தாழ்த்த கடுப்பான சவுந்தர்யா வீட்டினுள் சாப்பாடு தட்டுடன் அமர்ந்து நீங்க சொல்றப்ப சொல்லுங்க நான் என்னோட வேலைய பாக்குறேன் என சைலண்டாக சின்ன போராட்டம் செய்தார். இதில் அவருக்கும் சத்யாவிற்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது.

அதற்குப்பிறகு சத்யா செய்தது தான் ஹைலைட். 'இவ எல்லாம் படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்குறா? ரவுடி மாதிரி அவளும் அவ பேச்சும்' என கண்டபடி சவுந்தர்யாவை திட்டி அவரின் குரலையும் கிண்டல் செய்து பேசுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சவுந்தர்யா நடந்து கொண்டது சரியோ, தவறோ ஆனால் நீங்கள் இப்படி பேசியது தவறு.

வீட்டுக்குள் சட்டை போடாமல் பாதி நேரம் சுத்தும் நீங்கள் சவுந்தர்யா பற்றி தரக்குறைவாக பேசாதீர்கள் என அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் தன்னுடைய செய்கையால் சத்யா ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

அதே நேரம் சவுந்தர்யா மீதான ரசிகர்களின் பாசம் அதிகரித்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலினுக்கு அடுத்தபடியாக சவுந்தர்யா குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக மாறியுள்ளார். அவரின் இந்த வளர்ச்சி பிக்பாஸ் பைனல் வரை அவரை அழைத்து செல்லுமா?

Next Story