1. Home
  2. Bigg boss

Biggboss: அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்!.. பிக்பாஸுக்கே கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி...

பிக்பாஸ் தொடர்பான ஒரு முக்கிய செய்தியை பார்ப்போம்...

Biggboss tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இப்போது 8வது சீசனை தொட்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் நடத்திய நிலையில் இப்போது துவங்கியுள்ள 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். விஜய் சேதுபதி கையில் பல திரைப்படங்கள் இருக்கிறது.

ஆனாலும், கால்ஷீட் ஒதுக்கி வார இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை அவருக்கு பிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும். அதைத்தான் சனி மற்றும் ஞாயிறு இரவு ஒளிபரப்புகிறார்கள். இந்த முறை விஜய் சேதுபதி என்றாலும் பலருக்கும் சந்தேகம் இருந்தது.

கமலை போல விஜய் சேதுபதியால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக நடத்த முடியுமா என பலரும் நினைத்தார்கள். வார நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் கமல் வரும் போது பார்ப்பார்கள். அந்த ஆர்வத்தை விஜய் சேதுபதி ஏற்படுத்துவாரா என்பது போகபோகத்தான் தெரிய வரும்.

ஒரு போட்டியாளர் தவறு செய்தால் முகத்திற்கு நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து தனது வளைக்குள் கொண்டு வந்து அதன்பின் புரிய வைப்பார் கமல், ஆனால், விஜய் சேதுபதி இதற்கு நேர் எதிராக இருக்கிறார். எதுவாக இருந்தாலும் பட் பட்டென முகத்திற்கு நேராக சொல்கிறார்.

இது போட்டியாளர்களிடம் என்ன விளைவை ஏற்படுத்தும் என இனிமேல்தான் தெரிய வரும். இப்போதே, கமலை போல விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்தவில்லை என சிலர் சொல்ல துவங்கிவிட்டனர். அதேபோல் மற்றொரு விஷயத்தையும் விஜய் சேதுபதி பின்பற்றி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் பிரேக் முடிந்து நிகழ்ச்சி துவங்கும்போது நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்கள் பெயரை கமல் சொல்லுவார். ஆனால், விஜய் சேதுபதியோ ‘எல்லாவற்றையும் சொல்ல மாட்டேன். முக்கியமான ஒரே ஒரு நிறுவனம் பெயரை மட்டுமே சொல்லுவேன்’ என விஜய் டிவி நிர்வாகத்திடம் சொல்லிவிட்டாராம். அவர் சொல்ல மறுத்த நிறுவனங்களில் ஒன்று ஆன்லைன் ரம்மி தொடர்பானது என சொல்லப்படுகிறது.

அதற்காக அந்த நிறுவனத்தின் பெயரை சொல்லமாட்டேன் என சொல்லி இருந்தால் விஜய் சேதுபதி கண்டிப்பாக பாராட்டலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.




கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.