இனிமேல் வடிவேலு காமெடி எல்லாம் எடுபடாது? பிரபலம் சொல்வது என்ன?

by sankaran v |   ( Updated:2025-04-08 02:25:04  )
gangers vadivelu
X

gangers vadivelu

Vadivelu: வடிவேலு கேங்ஸ்டர் படத்துல வடிவேலு மீண்டும் சுந்தர்.சியுடன் இணைந்து கலக்குகிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சொல்வது இதுதான்.

மதகஜராஜா படத்துல சந்தானம் காமெடி எடுபட்டது போல மீண்டும் வடிவேலு காமெடியைக் கம்பேக்காகக் கொண்டு வந்து ஹிட் கொடுக்கலாம்னு தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறாங்க. ஆனால் அந்தளவுக்கு வடிவேலு காமெடி நிக்கல. வயது, ஓய்வு ரெண்டும் சேர்ந்து அவருக்கு ரொம்ப உடம்பு போட்டு கன்னம் எல்லாம் உப்பிப் போய் இருக்காரு.

அது அந்தக் காமெடிக்குப் பெரிய மைனஸாக இருந்தது. ஆரம்பத்துல நார்மலான ஆளாக இருந்ததால் வடிவேலு காமெடியை ரசிக்க முடிந்தது. ஆனா இன்னைக்கு காமெடியில பெரிய ஆளுங்கற அந்த விஷயம் அவருக்கு மண்டையில ஏறி உட்கார்ந்ததால அவரால பழைய இயல்புத்தனத்துல காமெடியை செய்ய முடியல. இந்தப் படத்துல என்ன பண்ணிருக்காருன்னு தெரியல. பார்க்கலாம்.

bismiஅவர் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் தெளிவா இருந்தாரு. அவரு ஹீரோவா நடிச்ச எலி, சுந்தரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலின்னு எல்லாப் படங்களுமே சூப்பர் பிளாப். இம்சை அரசன் 23ம் புலிகேசி மட்டும்தான் கமர்ஷியல் ஹிட். ஆனாலும் தன்னை விஜய், அஜீத் ரேஞ்ச்ல நினைச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னைக்கு அதைப் புரிஞ்சிக்கிட்டு பழைய பாணிக்கு வந்துருக்காரு. அது புத்திசாலித்தனம்தான். மாமன்னன் கூட கதைக்களம், கேரக்டராலதான் எடுபட்டது.

சினிமாவுல ட்ரெண்ட்செட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா துறையிலும் இருக்கு. இசையை எடுத்துக்கிட்டா இளையராஜா ஒரு ட்ரெண்ட் செட்டர். ஏ.ஆர்.ரகுமான் புதிய ட்ரெண்ட்செட்டர். அவர் இளையராஜா இடத்தைப் பிடிக்க முடியாது. அப்படித்தான் காமெடியில வடிவேலு ஒரு ட்ரெண்ட்செட்டர். அதுக்கு அப்புறம் பலர் வந்தாலும் இவரது இடத்தை நிரப்ப முடியாது. வடிவேலுவுக்குப் பிறகு சந்தானம் வரை தான் காமெடி.

அதன்பிறகு யோகிபாபு காமெடி எல்லாம் பெரிய அளவில் வரவில்லை. பல தயாரிப்பாளர்களை வடிவேலு கதற விட்டதால தான் வாய்ப்பு இல்லாம 3 வருஷமா சும்மா இருந்தாரு. தேர்தல்தான்னு சொல்றாங்க. அது கிடையாது என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. சினிமாவைப் பொருத்தவரை நம்மளைத் தேடி 10 பேரு வரும்போது ஒரு தெனாவெட்டு வந்துருக்கு. பின்னாடி யாரும் இல்லைன்னு புரியும்போது கொஞ்சம் மாற்றம் வந்துருக்கு. ஆனா வடிவேலு முற்றிலும் மாறவில்லை. மாறவும் மாட்டார் என்றும் பிஸ்மி சொல்கிறார்.

Next Story