பாடும் போது ஏற்பட்ட ஃபீலிங்!.. வெறியேறி உள்ளாடையுடன் ஓடிய சந்திரபாபு.. நடந்தது இதுதான்!..

chandra
திரையுலகில் வித்தியாசமான வசன உச்சரிப்பு, நடன அசைவுகள் என கலக்கியவர் சந்திரபாபு. திறமையான பாடகரும் கூட. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்தவர். இவரின் கால்ஷீட்டுக்கு அவர்கள் இருவரும் காத்திருந்த காலங்களும் உண்டு. சந்திரபாபு பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இவர் ஷீலா என்கிற பெண்ணை 1958ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், தான் இன்னொருவருடன் காதலில் இருப்பதாக அந்த பெண் கூறவே அவரின் மனைவியை அவரின் காதலருடன் வாழ வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கடைசி காலம் வரை தனிமையில் வாழ்ந்தார். தான் நேசித்த மனைவி தன்னை விட்டு போய்விட்டாரே என்கிற வலி அவருக்கு பல வருடங்கள் இருந்தது. இது அவரின் சினிமா கேரியரையும் பாதித்தது.

chandrababu
அப்போது கண்ணதாசன் தயாரிப்பில் உருவான ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் சந்திரபாபு நடித்துக்கொண்டிருந்தார். இப்படத்திற்காக ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்பாடலை பாட வந்த சந்திரபாபுவை அந்த பாடலின் வரிகள் மிகவும் பாதித்தது. எனவே, பாட முடியாமல் திணறியுள்ளார். முதல் டேக்கில் பாட முடியாமல் போக கோட்டை கழட்டி வீசியிருக்கிறார். அடுத்த டேக்கிலும் பாட முடியாமல் போக சட்டையை கழட்டி வீசியுள்ளார்.

chandrababu
இப்படி பேண்ட், ஷூ என எல்லாவற்றையும் கழட்டி வீசிவிட்டு உள்ளாடையுடன் நின்று கதறி அழுதுள்ளார். மேலும், அங்கிருந்து அப்படியே வெளியே சென்று காரை எடுத்து சென்றுவிட்டாராம். இந்த கோலத்தில் சந்திரபாபு வெளியே செல்கிறாரே என பதறியபடி கண்ணதாசன் அவரை தேடி சென்றுள்ளார். ஒரு தேவாலயத்தில் காரை நிறுத்திவிட்டு சந்திரபாபு அழுது கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாராம். அவரை சமாதானம் செய்து கண்ணதாசன் அழைத்து வந்துள்ளார். அதன்பின் ஒரே டேக்கில் அந்த பாடலை பாடி முடித்தாராம் சந்திரபாபு. இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த இசைக்கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு அழுதனராம்.
நாம் திரையில் ரசிக்கும் கலைஞர்கர்களின் வாழ்வில்தான் எத்தனை வலி!..
இதையும் படிங்க: என்னப்பா! யானை கூட கோர்த்து விடுற! – விஜயகாந்தின் ஐடியாவால் அதிர்ச்சியடைந்த சத்யராஜ்!