கோட் படத்தில் சி.எஸ்.கே. டீம் வீரர்கள்!. படத்துல என்னதாம்பா செய்றீங்க?... சொல்லுங்கப்பா!..
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் செய்யும் தொகைதான் காரணம். லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலையே பெற்றது.
ஆனால், லியோவை ஒப்பிடும்போது அந்த படம் வாங்கப்பட்ட தொகையில் 70 சதவீத தொகையைத்தான் வினியோகஸ்தர்கள் கோட் படத்திற்கு கேட்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அதாவது, லோகேஷ் கனகராஜுக்கு இருந்த எதிர்பார்ப்பு வெங்கட்பிரபுவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். லியோ படத்தை பேசியது போல் யாரும் கோட் படத்தை பேசவில்லை.
இதையும் படிங்க: திரிஷா வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகை?… இதனால் தான் அந்த பிரேக் அப் நடந்துச்சா?
கோட் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என பலரும் நடித்திருக்கிறார்கள். அதோடு வசீகரா படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து விஜயுடன் சினேகா ஜோடி போட்டு நடித்திருக்கிறார். மேலும், கொலை படத்தில் நடித்த மீனாக்ஷி சவுத்ரியும் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சமீபத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ஆனால், அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், கோட் படம் பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 முழுக்க முழுக்க கிரிக்கெட் தொடர்பானது.
இதையும் படிங்க: நடிகையுடன் ராமராஜனுக்கு தொடர்பு? சந்தேகப்பட்டு சிங்கப்பூர் வரை ஃபாலோ பண்ணி போன நளினி…
அதோடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் அவர். அதனால்தான், கோட் படத்தில் ‘விசில் போடு’ என ஒரு பாடலையே வைத்திருக்கிறார். கோட் படத்தில் ஒரு காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் வரப்போகிறார்களாம். அதோடு, அவர்களோடு வெங்கட்பிரபுவும் சி.எஸ்.கே டீம் பனியன் அணிந்து கொண்டு நடித்திருக்கிறாராம்.
இதை வைத்து பார்க்கும்போது கிரிக்கெட்டுக்கும், கோட் படத்துக்கும் கண்டிப்பாக எதாவது தொடர்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டைம் மிஷின், விஜய் இரட்டை வேடம், ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் 20 வயது விஜயின் தோற்றம் என பல விஷயங்கள் எதிர்பார்ப்பை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.