Connect with us

Cinema History

பாண்டவர் பூமி படப்பிடிப்பு தளத்தில் பாண்டிராஜுக்கு விழுந்த அடி!.. சேரன் இவ்ளோ கோவக்காரரா?..

சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாண்டிராஜ் ஒருமுறை சேரன் படப்பிடிப்பு தளத்தில் தன்னை மோசமாக திட்டி அடித்தார் எனக் கூறியுள்ளார்.  சினிமா இயக்குனர்கள் பெரும்பாலும் ஷூட்டிங் நேரத்தில் அதிக கோபத்துடன் தான் சுற்றுவார்கள். எப்படியாவது படத்தை நல்லா எடுத்தாக வேண்டும் என்கிற வெறி அவர்களுக்குள் இருக்கும்.

அதே சமயத்தில் ஏதாவது தவறு நடந்தால் அந்த இயக்குனர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அதிகம் காட்டுவது உதவி இயக்குனர்களிடம் தான். இயக்குனர் பாலா எல்லாம் படுமோசமாகவும் அசிங்கமாவும் நடிகர்களையே திட்டி அடிப்பார் எனக் கேள்விப்படும் நிலையில், சேரன் தனது உதவி இயக்குனரான பாண்டிராஜை பாண்டவர் பூமி படப்பிடிப்பின் போது திட்டி அடித்துள்ளார்.

இதையும் படிங்க: மெரி கிறிஸ்துமஸ் தோல்வியில் இருந்து மீள்வாரா விஜய் சேதுபதி?.. மகாராஜா பிரஸ் ஷோ விமர்சனம் இதோ!..

திருவிழா செட்டப் ஒன்று போடும் போது சேரன் அதிக செலவு வேண்டாம் என்றும் ரொம்ப டைட் ஷாட் தான் எடுக்கப் போகிறேன் என்று கூறிய நிலையில், ஆர்ட் டிபார்ட்மெண்டில் சொதப்பி விட்டனர். கடைசியில் தோரணம் கூட வைக்கவில்லை. செட்டை வந்து பார்த்த சேரன் என்னை பார்த்து முறைத்தார்.

திருவிழா செட்டப் என்றால் அட்லீஸ்ட் தோரணம் கூட வைக்கணும்னு தெரியாதா முட்டாள் என திட்டி ஓங்கி ஒரு அப்பு விட்டார் என பாண்டிராஜ் தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார். உடனடியாக அருகே இருந்த தோப்புக்கு சென்று தென்னை மரத்தில் ஏறி கொஞ்சம் குறுத்தை எல்லாம் பறித்துக் கொண்டு நானே தோரணம் செய்துக் கொண்டு வந்தேன்.

இதையும் படிங்க: விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்

அதை வாங்கிய சேரன் அந்த தோரணத்திலேயே மீண்டும் அடித்து, இதை முதலில் செய்தால் இவ்வளவு நேரம் வீணாகி இருக்காது, தேவையில்லாமல் அடி வாங்கியிருக்க மாட்ட என்றார். அவரிடம் சினிமாவை அதிகம் கற்றுக் கொண்டேன் என்றார். இயக்குனர் பாண்டிராஜ் பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

Continue Reading

More in Cinema History

To Top