மெரி கிறிஸ்துமஸ் தோல்வியில் இருந்து மீள்வாரா விஜய் சேதுபதி?.. மகாராஜா பிரஸ் ஷோ விமர்சனம் இதோ!..

விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த படம் விஜய் சேதுபதிக்கு 50வது படம் என்பதால் திரைக்கதையை எல்லாம் பார்த்து தேர்வு செய்து நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

விஜய் சேதுபதி, திவ்யபாரதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்த்த பலரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்

இந்த ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் விஜய் சேதுபதிக்கு அந்தாதூன் அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடித்தும் விஜய் சேதுபதிக்கு வெற்றி கிடைக்கவில்லை. கத்ரீனா கைஃப்புக்கு லிப் கிஸ் அடித்தது தான் அவருக்கு கிடைத்த சந்தோஷ தருணமாக அந்த படத்தில் மாறியது.

இந்நிலையில், தமிழில் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தனது சிறந்த நடிப்பையும் நகைச்சுவை தன்மையையும் வெளிக்கொண்டு வந்து நடிப்பு அசுரனாக நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நிச்சயம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என படத்தை பார்த்த பல விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயுடன் நடிக்க மறுத்த 3 டாப் நடிகர்கள்!.. கடைசியாக நடித்த அந்த நடிகர்!.. இவ்வளவு நடந்திருக்கா!..

இந்த ஆண்டின் சிறந்த படம் என்றும் விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே டாப் டக்கர் படம் என்றும் கண்டிப்பாக பெரிய பிளாக்பஸ்டர் அடிக்கும் என்றும் பலரும் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். அவரது நடிப்பும் படத்தில் ரசிகர்களை கவர்கிறது. அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முடிவெட்டும் தொழில் செய்யும் நபராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதி முழுவதும் லட்சுமியை தேடி அலையும் காட்சிகள் காமெடி அலப்பறை என்கின்றனர். இரண்டாம் பாதியில் லட்சுமி என்பது என்ன? என்கிற விவரம் வெளியாகும் இடத்தில் இருந்து ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் படம் முழுக்க பரவி கிடப்பதால் படம் தூள் கிளப்புவதாக விமர்சனங்கள் குவிந்துள்ளன.

இதையும் படிங்க: பொதுவா வீட்ல இருக்கும் ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கும்? ஆனால் இந்த நடிகை என்ன வச்சிருந்தாங்க தெரியுமா?

 

Related Articles

Next Story