Cinema News
அந்த எழவே வேண்டாமுன்னு தானே வந்தேன்!.. சாதி, சம்பிரதாயங்களை எதிர்க்கும் சேரன்.. தமிழ்க்குடிமகன் தப்பித்ததா?
சமீப காலமாக இயக்குனர் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் எளிய சாதி மக்களின் வலிகளை படங்களாக பதிவு செய்து வருகின்றனர். மேல் சாதி வர்க்கத்தினர் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை வலியோடும் வேதனையுடன் திரையில் காட்டி வருகின்றனர்.
இந்தாண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படமும் சாதி ரீதியாக தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் பாகுபாட்டை முன்னிறுத்தி இருந்தது.
இதையும் படிங்க: துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..
இந்நிலையில் அந்த வரிசையில் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் சேரனை வைத்து சாதிய சடங்குகள் மூலமாக நடைபெறும் அடக்குமுறைகளை தோலுரித்து காட்ட முயற்சி செய்துள்ள படம்தான் இந்த தமிழ் குடிமகன். ஆனால் திரையில் எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் படமாக கொடுத்தாரா இல்லையா என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்..
கிராமத்தில் மனைவி, அம்மா, தங்கச்சியுடன் வசித்து வரும் சேரன் தனது மூதாதையர்கள் செய்து வந்த சலவைத் தொழில் மற்றும் ஈமக்கிரியை சடங்குகள் தொழிலை தானும் செய்யக்கூடாது என தீர்க்கமான முடிவுடன் எப்படியாவது அரசாங்க வேலையை பெற்று விட வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறார்.
இதையும் படிங்க: கமல் நடிப்பே எனக்கு பிடிக்காது!.. வடிவேலு அதை விட பயங்கரமான நடிகர்!.. மாரிமுத்துவின் மறக்க முடியாத பேச்சு!..
அரசாங்க வேலையை பெற்று விட வேண்டும் என போராடி வரும் சேரன் அந்த வயது வரம்பு முடிவதற்குள் தேர்வு எழுத செல்லும்போது ஊரில் உள்ள ஆதிக்க சாதி வர்க்கத்தினர் சேரனை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர்.
அதனால், கடும் வேதனைக்கு உள்ளாகும் சேரன் சொந்தமாக பால் வியாபாரத்தை செய்து வருகிறார். அந்த ஊரில் ஆதிக்க சாதி நபராக வரும் நடிகர் லால் அவரது தந்தை இறந்தவுடன் ஈமத் காரியங்களை செய்ய சேரனுக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால், தன்னால் வர முடியாது என மறுத்துவிடுகிறார் சேரன்.
இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..
இதன் காரணமாக அப்பாவின் சடலத்தை பிரீசர் பாக்ஸில் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் லால் கடும் கோபம் கொண்டு சேரனின் வீட்டை அடித்து நொறுக்குகிறார். அதன் காரணமாக மேலும் ஆத்திரம் அடையும் சேரன் அந்த ஊரை விட்டே குடும்பத்துடன் வெளியே இருகிறார். உறவினரான போலீஸ் அதிகாரியை வைத்து லால் சேரன் மீது பொய் வழக்கு ஒன்றை போட்டு அப்பாவின் ஈம காரியத்தை செய்ய வேண்டும் இல்லையென்றால் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என்கிற நிலைமைக்கு கொண்டு வருகிறார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு வரை செல்கிறது. இறுதியாக சேரனுக்கு நியாயம் கிடைத்ததா இல்லை வில்லன் சாதித்தாரா என்பதுதான் கிளைமேக்ஸ்.
மிகவும் வலிமையான கதையை இயக்குனர் இசக்கி கார் வண்ணன் எடுத்து இருப்பதற்காகவே அவரை பாராட்டலாம். சேரனுக்கு நடிக்க எல்லாம் சொல்லித்தர தேவையே இல்லை. அதேபோல படத்தில் நடித்துள்ள லால், சேரனின் அம்மா, மனைவி மற்றும் தங்கை கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளன.
இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா…
முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் படம் இரண்டாம் பாதியில் பெரும் தொய்வை சந்திப்பதுதான் இந்தப் படத்தின் பலவீனமாக மாறுகிறது. சாம் சி எஸ் இசையில் பின்னணி உலுக்குகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்களின் கதாபாத்திரங்கள் திணிக்கப்பட்டது போல தெரிவது படத்திற்கு உறுத்தலாக மாறியுள்ளது.
ஆனால் சில இடங்களில் வசனங்கள் மூலம் சொல்ல வேண்டிய கருத்தை இயக்குனர் கச்சிதமாக கூறியுள்ளார். அந்த எழவே வேணாம்னு தானே வேற வேலைக்கு வந்தேன், மீண்டும் அதே எழவ செய்ய சொல்றீங்களே என சேரன் பேசும் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் படத்தின் மையக்கருத்துக்காக ஒருமுறை பார்க்கலாம்.
தமிழ்க்குடிமகன் – தடுமாற்றம்!
ரேட்டிங் – 2.5/5.