2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

by சிவா |   ( Updated:2024-06-25 11:58:11  )
venkat prabu
X

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஏஜிங் தொழில் நுட்பத்தில் மகன் விஜயை ஒரு வாலிபர் போல காட்டும் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. அவர்கள் அந்த வேலையை முடித்து கொடுத்தபின் எடிட்டிங், டப்பிங் போன்ற வேலைகளை பார்க்கவிருக்கிறார் வெங்கட் பிரபு.

இப்படத்தை அதிக செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். அது இல்லாமல் சில காட்சிகளில் இன்னொரு கெட்டப்பிலும் வருகிறாராம் விஜய். எனவே, விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

செப்டம்பர் 5ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதற்கான வேலைகளை படக்குழு வேகமாக செய்து வருகிறது. ஒருபக்கம், இப்ப்டத்தில் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியானது.

Goat

Goat

யுவன் சங்கர் ராஜா அனுப்பிய 4 டியூன்களில் விஜய் தேர்ந்தெடுத்த டியூன் இதுதான் என சொல்லப்பட்டது. அந்த பாட்டு விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. ‘அனிருத்தாக இருந்திருந்தால் அசத்தி இருப்பார். யுவன் சொதப்பிவிட்டார்’ என விஜய் ரசிகர்களே சமூகவலைத்தளங்களில் திட்டினர். இதனால் யுவன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே மூடிவிட்டு போனார்.

கோட் படத்தின் 2வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜயின் பிறந்தநாளான கடந்த 22ம் தேதி வெளியானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யுவனின் சகோதரி மறைந்த பாடகி பவதாரிணி குரலில் இப்பாடலை உருவாக்கி இருந்தார்கள். அந்த பணி நன்றாகவே இருந்தது. வழக்கமாக விஜயின் பாடல் வீடியோ வந்தால் ஒரு நாளிலேயே வியூஸ் 10 மில்லியனை தொட்டுவிடும். ஆனால், இந்த பாடல் வெளியாகி 3 நாட்கள் ஆகியும் இன்னும் 7 மில்லியனையே தொடவில்லை.

இந்த பாடலை உருவாக்க நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் போட்டு கொடுத்தது தயாரிப்பு நிறுவனம். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு யுவன் போட்ட பழைய ட்யூனையே கொஞ்சம் மாற்றி பாடலாக கொடுத்திருக்கிறார்கள் என ரசிகர்களே சொல்கிறார்கள். 7 நாட்கள் பாட்டு உருவாக்க போய் ஒன்றரை நாளில் முடித்துவிட்டனர். ஏனெனில், அவர்கள் அங்கே இருக்கும்போதுதான் பவதாரிணி மரணமடைந்தார். எனவே, அவசர கோலத்தில் முடிக்கப்பட்டு வெளியான பாடல் என சொல்லப்படுகிறது.

Next Story