Connect with us
Sarojadevi, Thevar

Cinema History

நாளைக்கு உன்ன கல்யாணம் பன்றேன்!.. சரோஜாதேவியை அதிரவைத்த சின்னப்பா தேவர்…

தமிழ்நாட்டில் இன்றைய இளைஞர்களுக்கு ஆங்கில மோகம் ரொம்பவே ஆட்டிப்படைக்கிறது. பலரும் தங்களின் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். ஆங்கிலத்தில் ஒருவர் பேசினால் அவருக்குத் தான் தனி மரியாதை என்றாகிவிட்டது. இது இப்போது மட்டுமல்ல. அந்தக் காலத்திலும் அப்படி தான் இருந்துள்ளது. அப்படி ஒரு சுவையான சம்பவம் சரோஜாதேவி வாழ்க்கையில் நடந்துள்ளது.

தமிழ்ப்பட உலகில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் சின்னப்பா தேவர். இவருக்கும் ஆங்கில மோகம் இருந்து வந்தது. அதனால் இவர் பட்லர் இங்கிலீஷைப் பேசுவாராம். அதாவது தான் சொல்ல நினைத்ததை தனக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பேசுவது.

இதையும் படிங்க: சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!…

நண்பர்களிடம் அவ்வப்போது இப்படி கேட்பாராம். ஈஸியா இங்கிலீஷ் பேசணும்னு ஆசை முருகா… என்ன வழி? என்று. அதற்கு அவர்கள், மத்தவங்க தமிழ்ல பேசினாலும் நீங்க பதிலுக்கு இங்கலீஷ்லயே பேசுங்க. ஈஸியா பழகிடலாம்னு சொல்லிருக்காங்க.

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்த நேரத்தில், நடிகை சரோஜாதேவி இவர் அருகில் தயங்கி தயங்கி வந்து நின்றாராம். என்னம்மா… என்று தேவர் கேட்டாராம். அதற்கு அண்ணே, நாளைக்கு எனக்கு கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. சூட்டிங் வர முடியாது. நான் இல்லாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி எடுத்துக்கறீங்களான்னு கேட்டாராம்.

இதையும் படிங்க: சாவித்ரியிடம் போட்டி போட்ட சரோஜா தேவி… கன்னட பைங்கிளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் திலகம்…

அதற்கு தேவர் பேச வாய் திறந்தாராம். ஆனால் இங்கிலீஷ்ல பேசணும்னு நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வந்ததாம். உடனே, ஸ்டைலாக சரோஜாதேவியைப் பார்த்து இப்படி சொன்னாராம்.

ஓகே. ஓகே. டுமாரோ ஐ வில் மேரேஜ் யூ… இதைக் கேட்டதும் ஆடிப்போய்விட்டாராம் சரோஜாதேவி. என்னண்ணே சொல்றீங்க…ன்னு பயத்துடன் கேட்க, அருகில் இருந்தவர்கள் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தினார்களாம். அதன்பிறகு தான் நிம்மதியாகப் போனாராம் சரோஜாதேவி.

அதாவது மேனேஜ் செய்து கொள்கிறேன் என்பதைத் தான் தேவர் தவறாக மேரேஜ் என்று சொல்லி இருக்கிறார். ஆங்கில மோகம் தவறல்ல. ஆனால் அதை முறைப்படி கற்றுக்கொண்டு பேசினால் இப்படிப்பட்ட குளறுபடிகளை நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top