Categories: latest news

என்னடா சியான் 62 டைட்டிலுக்கு வந்த சோதனை!.. ஏற்கனவே அந்த நடிகர் நடிச்ச படமா வீர தீர சூரன்?..

சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62வது படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி உள்ளது. வீர தீர சூரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதே டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் உள்ளதே என நெட்டிசன்கள் அந்த படத்தின் போஸ்டரை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

வீர தீர சூரன் படத்தின் 2ம் பாகத்தின் டைட்டில் டீசர் தான் இப்போ வெளியாகி உள்ளது. மேலும், முதல் படத்தை முதலில் வெளியிடாமல் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, அதன் பின்னர் முதல் பாகத்தை முதலில் வெளியிட இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு!.. மனுசி டிரெய்லரில் மிரட்டும் ஆண்ட்ரியா!.. வசனமெல்லாம் ஃபயரு!..

சியான் விக்ரம் படங்கள் எப்போதும் சோதனை முயற்சி படங்களாக உருவாகி அவருக்கு பெரிய சோதனையை கொடுத்து விடும். அந்த வகையில் இந்த படம் அமையாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தங்கலான் படத்துக்காக ரொம்பவே சியான் விக்ரம் கஷ்டப்பட்டு நடித்த நிலையில், ஒரு வருடமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் சித்தா படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 62 வது படத்திற்கு வீர தீர சூரன் என டைட்டில் வைத்து டைட்டில் அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சித்தா படத்தை போல இந்த படத்தையும் ரொம்பவே கம்மி பட்ஜெட்டில் எடுத்து வருகின்றார்களா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வீர தீர சூரன் எனும் படம் 2016ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த டைட்டிலை தான் தற்போது இந்த படத்துக்கு எடுத்து பயன்படுத்தி உள்ளனர் என்றும் உரிய அனுமதியை வாங்கினார்களா? இல்லையா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் ஈகோவை டச் பண்ணிய நடிகை!.. கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?…

Saranya M

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

7 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago