சிவக்குமார் ஏன் டைரக்டர் ஆகல? சோ சொன்ன அந்த தகவல்!
சிவக்குமார் மாதிரி ஒரு ஜென்டில்மேனைப் பார்க்குறது ரொம்ப கஷ்டம். இவ்வளவு நல்ல குணங்களும் ஒரு மனிதரிடம் எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிறவர் சிவக்குமார் தான். பல வெற்றிகளைப் பெற்ற போதும், அவை எல்லாம் தன் தலைக்கு போகாமல் பார்த்துக் கொண்டார் என்று சோ அவரைப் பாராட்டியுள்ளார். அவர் மேலும் என்ன சொல்கிறார்னு பாருங்க. சிவக்குமார் சினிமா உலகிலே அடி எடுத்து வைத்த காலகட்டம் ரொம்ப கஷ்டமானது. சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன் என மூவரும் சினிமா […]

சிவக்குமார் மாதிரி ஒரு ஜென்டில்மேனைப் பார்க்குறது ரொம்ப கஷ்டம். இவ்வளவு நல்ல குணங்களும் ஒரு மனிதரிடம் எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிறவர் சிவக்குமார் தான். பல வெற்றிகளைப் பெற்ற போதும், அவை எல்லாம் தன் தலைக்கு போகாமல் பார்த்துக் கொண்டார் என்று சோ அவரைப் பாராட்டியுள்ளார். அவர் மேலும் என்ன சொல்கிறார்னு பாருங்க.
சிவக்குமார் சினிமா உலகிலே அடி எடுத்து வைத்த காலகட்டம் ரொம்ப கஷ்டமானது. சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன் என மூவரும் சினிமா உலகை ஆண்டு கொண்டு இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதே கஷ்டம். ஆனாலும் சினிமா உலகில் நுழைந்து தன்னை கதாநாயகன் அளவுக்கு உயர்த்திக் கொண்டார் என்றால் எந்தளவுக்கு அவரது உழைப்பு இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
சிவக்குமாரைப் பொருத்தவரை அவருக்கு சினிமா உலகில் தெரியாததே கிடையாது. ஒரு இயக்குனருக்கு தெரிந்த விஷயம் எல்லாம் அவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவர் திரைப்படங்களை எல்லாம் இயக்கவில்லை என்றால் அதுக்கு முக்கியமான காரணம் அவரது அடக்கக் குணம்தான் என்கிறார் சோ.




