நாய்க்குட்டி மேல் அதீத அன்பு வைக்கும் கனவு கன்னிகள்... திரிஷா, சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை...

by Manikandan |
நாய்க்குட்டி மேல் அதீத அன்பு வைக்கும் கனவு கன்னிகள்... திரிஷா, சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை...
X

சினிமா நடிகைகளுக்கு தன்னுடன் ஒரு அழகான செல்லப்பிராணியை அழைத்துச் செல்வது, அதனுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்பது மிகவும் பிடித்தமான செயல். அதுவும் குறிப்பாக அழகான நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் மிகவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடந்து வருகிறது.

ஆரம்பத்தில் திரிஷா இதனை நிறையசெய்துள்ளார். நாய்க்குட்டிகளை எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட விலங்கு பாதுகாப்பு அமைப்பில் கூட அவர் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கூட கொண்டாடியுள்ளார். மேலும், தனது செல்ல நாய்க்குட்டி உடன் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கூட நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய் குட்டியை தன்னுடன் வெளியூருக்கு சூட்டிங் அழைத்துச் செல்கிறார் என்று ஒரு வதந்தி பரவ, உடனே, தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார் ரஷ்மிகா மந்தனா. அவரது நாய் அவரது வீட்டில்தான் பத்திரமாக இருக்கிறது என்று பதில் கூறிவிட்டார்.

இதையும் படியுங்களேன் - அண்ணானு கூப்பிட்டடா சூர்யாவுக்கு சுத்தமாக பிடிக்காது.! அம்மா நடிகை கூறிய சூப்பர் சீக்ரெட் இதோ...

அதேபோல் அண்மையில் கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய் குட்டியுடன் விமானத்தில்பறந்துள்ளார் அதுதான் அவரது நாய்க்குட்டியின் முதல் விமான பயணம் ஆகும். இதற்காக சுமார் 45 லட்ச ரூபாய் செலவு செய்தார் என்று பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது. தனியார் விமானத்தில் இப்படி அழைத்துச் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதுபோல் பல சினிமா நடிகைகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அவ்வபோது தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story