கமல் முன்னாடியே ரஜினி பேசின பேச்சு... மறுநாள் கமல் வீட்டுக்கு தேடிப்போன பார்சல்... மெய்சிலிர்த்த உலகநாயகன்..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இருவரின் நட்பை பற்றி சொல்லவே தேவையில்லை. சினிமாவில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களே கிடையாது. ஆனால் இருவருக்குள்ளும் எப்போதும் போட்டியும், பொறாமையும் இருந்தது கிடையாது. இருவரும் அவ்வளவு ஒரு அழகான நட்புடன் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
இதில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ரஜினிகாந்த், கமலஹாசன் பற்றி பேசியதை பகிர்ந்து இருக்கின்றார். கமலஹாசன் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை கௌரவிக்கும் விதமாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலைத்தாயின் தவப்புதல்வன் என்ற பெயரில் விழா நடைபெற்றது.
அதில் மேடை ஏறி பேசிய ரஜினி, நான் அடிக்கடி யோசிப்பேன், சினிமாவில் மோகன்லால், மம்முட்டி, வெங்கடேஷ், சரத்குமார், நான் என பலரையும் கலைத்தாய் கையைப் பிடித்து அழைத்து கொண்டு போறாங்க. ஆனா கமலை மட்டும் ஏன் தோல்ல தூக்கி மார்போடு அணைச்சு வச்சிருக்காங்க என்று யோசிப்பேன். நான் கலை தாய்கிட்டையே இதை கேட்டேன்...
ஏம்மா, இது உனக்கு நியாயமா இருக்கா? நாங்களும் உங்கள் குழந்தைகள் தானே, அப்புறம் ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்டேன். அதற்கு கலைத்தாய் சொன்னது ரஜினி நீ போன ஜென்மத்துல நடிகன் ஆகணும்னு ஆசைப்பட்ட, ஆனால் கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டன்ட் டைரக்டர், ஒரு ஜென்மத்துல நடிகர், இன்னொரு ஜென்மத்துல டைரக்டர் என கடந்த ஏழு ஜென்மங்களா போராடிட்டு இருக்கான்.
அதனால தான் அவரை தோல்ல தூக்கி வைத்து கொண்டாடுறேன்னு சொன்னாங்க.. கமல் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதும் அவர் நடிக்கும் அதே தமிழ் சினிமாவில் நானும் நடிக்கிறேன் என்பதை எனக்கு பெருமை என்று தன்னுடைய பாணியில் மிகச் சிறப்பாக பேசினார் ரஜினி. இதைக் கேட்ட கமலின் கண்களில் கண்ணீரை வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கூறியவர் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற ரஜினி ஒரு ஓவியரை வரவழைத்து அழகிய கலைத்தாய் போன்ற சிலையை வரைந்து அதில் இடுப்பில் கமலஹாசனை தூக்கி வைத்திருப்பது போலும், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களை கையில் பிடித்து அழைத்துக் கொண்டு செல்வது போன்ற ஒரு அழகிய புகைப்படத்தை வரைந்து அதனை கமலுக்கு பரிசாக அனுப்பி வைத்திருக்கின்றார். இதை பார்த்த கமலஹாசனுக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாயடைத்து போய் விட்டாராம் என்று செய்யாறு பாலு தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்