1. Home
  2. Cinema News

கெளதம் மேனனின் முதல் படத்தில் பெயரை மாற்ற காரணம் சொன்ன தயாரிப்பாளர்... ஆனா நடந்ததே வேற!


தமிழ் சினிமாவில் ரொமான்ஸ், போலீஸ் ஜானர் படங்களுக்கென தனி திரைக்கதை வடிவத்தைக் கொடுத்து புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் மேனன். பாலக்காட்டை அடுத்த ஒட்டப்பாலம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை வாசுதேவ் மேனன் மலையாளி என்றாலும் இவரது தாய் உமா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

கேரளாவில் பிறந்திருந்தாலும் இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை அண்ணா நகரில்தான். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர் புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும் முடித்திருக்கிறார். பொறியியல் படித்திருந்தாலும் சினிமா மீதுள்ள தீராத காதலால் இயக்குநராக முயற்சி செய்திருக்கிறார்.

2000-த்தில் `ஓ லைலா’ என்கிற டைட்டிலில் ஒரு காதல் கதையைத் தயார் செய்த கௌதம் மேனன், அதைப் பல தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறார். இருந்தும் எந்தவொரு தயாரிப்பாளரும் அதைத் தயாரிக்க முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் முரளி தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அலைபாயுதே புகழ் மாதவனை ஹீரோவாக்க நினைத்து அவரிடம் கதை சொல்ல, அவரோ மணிரத்னத்திடம் கதையைச் சொல்லச் சொல்லியிருக்கிறார்.

கதையைக் கேட்ட மணிரத்னம் பெரிதாக ஈடுபாடு காட்டாதநிலையில், இதில் ஆரம்பத்தில் நடிக்க மாதவன் தயங்கியிருக்கிறார். பின்னர், மின்னலேவில் நடிக்க ஒப்புகொண்டிருக்கிறார். ஆரம்பத்தியில் 1999 மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற யுக்தா முகி, பின்னர் இஷா கோபிகர் என ஹீரோயின் கேரக்டருக்காக கௌதம் பேசிய நிலையில், ரீமா சென் உள்ளே வந்தாராம். படம் 2001 பிப்ரவரி 2-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்தப் படம் மூலம் ஹாரிஸ் ஜெயராஜூம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்போது கௌதம் வாசுதேவ் மேனன் என டைட்டில் கார்டில் பெயர் போட்டு வருகிறார் இயக்குநர். ஆனால், மின்னலே படத்தில் இயக்குநர் என்கிற இடத்தில் கௌதம் என்று மட்டுமே போடப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் தயாரிப்பாளர் முரளி சொன்ன வார்த்தைதானாம். இயக்குநரின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் எல்லாம் கௌதம் வாசுதேவ் மேனன் என்றே எழுதப்பட்டிருக்கும்.

மின்னலே எடிட்டிங் சமயத்தில் அவரிடம் பேசிய தயாரிப்பாளர் முரளி, கௌதம் வாசுதேவ் மேனன் என்று நீளமாகப் போட வேண்டாம். ஷங்கர் போல் சுருக்கமாக கௌதம் என்று போட்டுக்கொள். கௌதம் வாசுதேவ் மேனன்னு வைச்சா நீ காணாமப் போய்டுவ என்று சொன்னாராம். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த இயக்குநர், இதனாலேயே தனது பெயரை சுருக்கி கௌதம் என்று டைட்டில் கார்டில் போட்டிருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.