என்னது அமரன் 500 கோடி வசூலா..? சீமானுக்கு ஏன் அது தெரியலையா? பிரபலம் கேள்வி

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:52:36  )
amaran
X

amaran

சிவகார்த்திகேயனோட அமரன் 3 நாளில் 100 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். டாப் ஹீரோக்கள் மாதிரி அந்த லிஸ்ட்ல வந்துட்டாருன்னு சொல்றாங்க. இது உண்மையான்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

இந்த தகவல் பொய். கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாமே வணிகரீதியாக தோல்வி தான். ஆனா சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படைகள் ஒவ்வொரு படத்தையுமே பிளாக்பஸ்டர் தான் என்ற ஒரு தோற்றத்தை சமூக ஊடகங்களில் உண்டாக்கிவிட்டது.

அதை மக்களும் நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா சிவகார்த்திகேயனின் படங்கள் அப்படி பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. டான் படம் மட்டும் விதிவிலக்கா இருந்துச்சு. மாவீரன், அயலான் படமும் தோல்வி தான். அந்தவகையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் நல்ல வசூலை ஈட்டி உள்ளது. அதுல எந்த மாற்றமும் இல்லை.

சிவகார்த்திகேயனின் கேரியரிலேயே இது உச்சம். நான் கேள்விப்பட்ட வரையில் நாலு நாளில் தமிழகத்தில் 77 கோடி வசூல் பண்ணியிருக்கு. அப்படியே சமூக ஊடகங்களில் பார்த்தால் இது 3 நாள்களிலேயே 100 கோடி ரூபாயை வசூல் பண்ணிருக்குன்னு பொய்யான தகவலைப் பரப்பிக்கிட்டு இருக்காங்க. அது உண்மையில்லை.

ஆனா இன்னும் இரண்டொரு நாள்களில் 100 கோடியை கிராஸ் பண்ணும். அதுல எந்தவொரு மாற்றமும் இல்லை. அதுக்காக ஒரு பொய்யான தகவலைப் பரப்பக்கூடாது. 3 நாள்ல 100 கோடி. 2 நாள்ல 500 கோடின்னு சொல்றது எல்லாம் மக்களை முட்டாளாக்குகிற விஷயம்.

amaran

ராஜ்கமல் நிறுவனம்னு சொன்னாலும் உண்மையிலேயே இந்தப் படத்தைப் புரொமோட் பண்றது விஜய்டிவி மகேந்திரன். அவருக்கு எல்லா மட்டத்திலும் மிகப்பெரிய நட்பு வட்டம் இருக்கு. அதுமாதிரி கமலுக்கு சினிமாவைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் நிறைய நட்பு இருக்கு. இதெல்லாம் பெரிய புரொமோஷன்.

அதனால சூர்யாவில் இருந்து பல பிரபலங்கள் வரை படம் பார்க்க வந்து கருத்து சொல்றாங்க. அதுவும் பெரிய புரொமோஷன் ஆகுது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் அவர் பக்கம் இருந்து புரொமோட் பண்றாரு. வணிகரீதியாக வெற்றி என்றாலும் இந்தப் படத்தின் மீது ஒரு விமர்சனமும் இருக்கு. சிறுபான்மை மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக விமர்சனம் இருக்கு.

அந்த வகையில் ஒரு பக்கம் சிறுபான்மை மக்களுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொள்கிற சீமானுக்கு இந்த விமர்சனங்கள் எல்லாம் தெரியவில்லையா? அல்லது சிவகார்த்திகேயனுக்காக சொல்லாமல் விட்டுவிட்டாரா? அவர் எப்படி மணிக்கணக்கில் பாராட்டினார்? அப்படிங்கற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story