முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜூன்!... ஷங்கர் செய்த வேலையில் மனசு மாறிய சம்பவம்!..

Mudhalvan: ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதற்கு ஜென்டில்மேன் படம் ஒரு நல்ல உதாரணம். அதுவரை அர்ஜூனை வைத்து பெரிய இயக்குனர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, அவரே காசுபோட்டு படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வந்தார். அப்போதுதான் அவர் முதல்வன் படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின்னரே பெரிய இயக்குனர்கள் அர்ஜூன் பக்கம் போனார்கள். ஆனால், அந்த படத்தில் அர்ஜூன் நடிக்க மறுத்த சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கிறது.
ஷங்கரின் முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இந்த படத்தை தயாரித்தது குஞ்சுமோன். இயக்குனர் பவித்ரனின் மீது இருந்த கோபத்தில் அவரின் உதவியாளர் ஷங்கரை அழைத்து ‘நான் தயாரிக்கும் அடுத்த படத்துக்கு நீதான் இயக்குனர்’ என குஞ்சுமோன் சொல்ல சென்னை தி.நகரில் உள்ள நடேசன் பூங்காவில் அமர்ந்து ஒரு மெல்லிய காதல் கதையை எழுதினார் ஷங்கர்.
ஆனால், ‘காதல் கதை வேண்டாம். பக்கா ஆக்ஷன், ஹீரோயிசம் உள்ள ஒரு கதை வேண்டும். பட்ஜெட்டை பற்றி கவலையில்லை’ என குஞ்சுமோன் சொல்ல ஷங்கர் எழுதிய கதைதான் ஜென்டில்மேன். கதையை எழுதியதும் அவர் முதலில் சொன்னது கமலிடம்தான். ஆனால், நான் பல வருடங்களுக்கு முன்பு நடித்த ‘குரு’ படத்திலும் இதே கதைதான் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார் கமல்.
அதன்பின், சரத்குமாரிடமும் இந்த கதையை சொன்னார் ஷங்கர். ஆனால், சரத்குமார் யோசித்துக்கொண்டே இருந்தார். வேறு சில ஹீரோக்களிடம் சொல்லியும் ஓகே ஆகவில்லை. அப்போது சினிமா டைரியை எடுத்து ‘இதில் நமக்கு ஹீரோ கிடைக்கிறாரா பார்ப்போம்’ என ஷங்கர் பார்த்தபோது முதல் வரிசை A என்பதால் அர்ஜூன் பெயர் காட்டியது.
எனவே, அர்ஜூனை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அப்படித்தான் முதல்வன் படத்தில் அர்ஜூன் நடித்தார். முதல்வரிடம் ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியெடுக்க அதில் ஏற்படும் பிரச்சனையால் அந்த செய்தியாளரே நாட்டின் முதல்வர் ஆவதுதான் படத்தின் கதை. ஒருநாள் முதல்வர் என்கிற புது டாப்பிக்கை கொண்டு ரசிகர்களை ரசிக்க வைத்தார் ஷங்கர். அர்ஜூனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, காமெடிக்கு வடிவேலு, இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வில்லனாக ரகுவரன் என வெற்றிக்கு தேவையான எல்லோரும் படத்தில் இருந்தார்கள். இந்த படத்தை ஷங்கரே தயாரித்தும் இருந்தார். படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என பல திரைப்படங்களையும் ஷங்கர் இயக்கி இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனராக மாறினார். இப்போது ராம் சரணை வைத்து இவர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் விரைவில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதல்வன் படத்தில் நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அர்ஜூன் ‘அப்போது எந்த இயக்குனரும் என்னை தேடி வரவில்லை. அதிக படங்களிலும் நான் நடிக்கவில்லை. நான் இயக்கி நடித்திருந்த சேவகன் படம் மட்டுமே ஹிட் ஆகியிருந்த நேரம். அப்போதுதான் ஷங்கர் வந்தார். இனிமேல் வெளிநபர் தயாரிப்பில் நடிக்க நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க முடியாது’ என சொன்னேன். ‘கதையை கேட்டுவிட்டு சொல்லுங்கள்’ என ஷங்கர் சொல்ல கதையை கேட்டேன். கதை மிகவும் பிடித்துப்போக நடிக்க சம்மதம் சொன்னேன். முதல்வன் படம் எனக்கு முக்கிய படமாக அமைந்துவிட்டது’ என சொல்லி இருக்கிறார்.