இப்பதான் அமரன்!.. முகுந்த் வரதராஜனுக்கு ஆக்‌ஷன் கிங் அப்பவே என்ன பண்ணார் பாருங்க!..

Published on: November 7, 2024
---Advertisement---

Amaran: அமரன் என்கிற படம் உருவான போதுதான் இது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதை என்பது மக்களுக்கு தெரிய வந்த்து. இன்னும் சொல்லப்போனால், முகுந்த் வரதாராஜன் என்கிற பெயரை பலரும் அப்போதுதான் கேள்விப்பட்டார்கள்.

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் எல்லாருமே வீர்ர்கள். நான் சினிமாவில் பார்ப்பவர்கள் அல்ல. ராணுவ வீரர்கள்தான் நிஜமான ஹீரோக்கள். அந்நியர்களும், எதிரிகளும் நமது நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, காத்து நிற்பவர்கள் அவர்கள். குளிரிலும், மழையிலும், பணியிலும் நாட்டுக்காக நிற்பவர்கள்.

இத்தனைக்கும் அவர்களுக்கு கொடுக்கப்படுவது ஒன்றும் பெரிய சம்பளம் அல்ல. ஒரு சொந்த வீட்டை கூட வாங்க முடியாதபடிதான் ராணுவ வீரர்களின் பொருளாதார நிலை இருக்கிறது. அமரன் படத்தில் கூட ஒரு இடத்தை வாங்குவது பற்றி சிவகார்த்திகேயன் அவரின் அப்பாவிடம் பேசும் உரையாடல் வரும்.

இதை தன்னை கலங்க செய்துவிட்டதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உருகியிருந்தார். எந்த நேரமும் குண்டடி பட்டு தான் இறந்து போகலாம் என தெரிந்தே ராணுவ வீரர்கள் தங்களின் கடமையை செய்கிறார்கள். முகுந்த் வரதராஜன் கூட ஒரு திறமையான ராணுவ வீரராக இருந்தவர். பல தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்.

ஸ்ரீநகரில் மக்கள் வசிக்கும் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் இருப்பது கேள்விப்பட்டு தனது படையுடன் அங்கே போனார் முகுந்த். எல்லோரையும் தடுத்துவிட்டு அவரும் அவரின் நண்பரும் மட்டும் உள்ளே போனார்கள். அப்போது அவரின் நண்பர் சுட்டு கொல்லப்பட்டார். முகுந்த் அந்த வீட்டில் இருந்த தீவிரவாத குழு தலைவனை சுட்டு கொன்றார். அப்போது அவன் சுட்டதில் சில குண்டுகள் முகுந்த் மீது பாய்ந்து மருத்துவமனை செல்லும் முன்பே மரணமடைந்தார்.

இந்த கதையைத்தான் அமரன் படமாக எடுத்திருக்கிறார்கள். முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரிய சாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை பார்த்த இயக்குனர்கள் பலரும் ‘அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு செய்யப்பட்ட சிறப்பான மரியாதை’ என புகழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், 10 வருடங்களுக்கு முன்பே ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஜெய் ஹிந்த் 2 எடுத்த போது முகுந்த் வரதராஜன் குடும்பத்தை வரவழைத்து அப்படத்தின் இசையை வெளியிட்டார் என்பது பலருக்கும் தெரியாது. அது தொடர்பான புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment