தனுஷுக்கு கிடைக்க வேண்டிய தேசியவிருது! காற்றாற்று வெள்ளமா வந்து எல்லாத்தையும் கெடுத்துப்புட்ட படம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் இன்று ஒரு மாபெரும் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களை பிரமிக்க வைக்கிறது. ஆரம்பகாலத்தில் ஒரு லவ்வர் பாயாக கதைக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடித்து கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தார் தனுஷ்.
ஆனால் ஒரு சமயத்திற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் மக்களை நல்ல முறையில் சென்றடைய அதுவே அவர் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் என்றால் அசுரன் திரைப்படத்தை சொல்லலாம்.
அதுவரை தனுஷை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் யாருமே நினைத்து கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையுமே ஆச்சரியப்படுத்தினார். அது மட்டும் அல்லாமல் அந்த படத்திற்கு தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
அந்த படத்தை இயக்கியது தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன். ஆரம்பத்தில் செல்வராகவன் இந்த படத்தை பற்றி கூறும்போது ஒரு கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒரு புரிதலை ஆழமாக கூறியிருந்தார் எனவும் படத்தின் கதையைக் கேட்ட பிறகு கண்டிப்பாக படத்தில் நடிக்கும் தனுஷ் மற்றும் ஹீரோயின் இயக்குனர் செல்வராகவன் மூன்று பேருக்குமே கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்றும் தாணு கூறினாராம்.
ஆனால் படம் எடுக்க எடுக்க அந்த கதையில் கொஞ்சம் வித்தியாசத்தை புகுத்தினாராம் செல்வராகவன். கணவன் மனைவி என்ற பந்தம் போய் ஒரு குழந்தையின் மீது ஒட்டுமொத்த கதையும் திரும்பியதாக தாணு கூறியிருந்தார். இருந்தாலும் அந்த கதையும் அனைவரையுமே ஈர்த்தது என்றும் அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படம் வந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்து விட்டது என்றும் தாணு கூறினார். ஒரு காற்றாட்டு வெள்ளமாக பொன்னியின் செல்வன் படம் அனைத்தையும் அடித்துச் சென்று விட்டது என ஒரு பேட்டியில் தாணு கூறி இருக்கிறார்.