அஜித்தை இயக்கப்போகும் அந்த நடிகர்!.. அட இந்த காம்பினேஷனை நினைச்சே பார்க்கலயே!....

Dhanush Ajith: அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. வழக்கமான தனது மாஸ் நடிகர் என்கிற ரூட்டிலிருந்து விலகி ஒரு ஹாலிவுட் ஹீரோ போல இமேஜ் பார்க்காமல் அஜித் நடித்த இந்த படம் உண்மையிலேயே பெண்களுக்கும், அவரின் ரசிகர்களில் சிலருக்கும் பிடித்திருந்தது.
விடாமுயற்சி: ஆனால், அஜித்திடம் மாஸ் மற்றும் ஆக்சன் காட்சிகளை எதிர்பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படம் திருப்தியை கொடுக்கவில்லை. எனவே, இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனாலும் அஜித் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அவர் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஒருபக்கம், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து முடித்திருக்கிறார்.
குட் பேட் அக்லி டீசர்: இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமையும் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத ஒன்று கோலிவுட்டில் நடந்திருக்கிறது.
இந்த வருடம் ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது அஜித்துக்கும் பிடித்துபோக டெவலப் செய்து சொல்லுங்கள் என சொல்லியிருக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் அஜித் சென்னை வரவிருக்கிறாராம். அப்போது முழுக்கதையையும் தனுஷ் அவரிடம் சொல்லவிருக்கிறார். கதை பிடித்திருந்தால் தனுஷ் சொன்ன கதையில் அஜித் நடிப்பார் என்கிறார்கள்.
இயக்குனராக வெற்றி: தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கினார். இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி நடித்து வருகிறார். ராயன் படம் உலகம் முழுவதும் சேர்த்து 160 கோடி வரை வசூல் செய்தது. எனவே, இயக்குனராகவும் அவர் தன்னை நிரூபித்துள்ளதால் அஜித் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது மட்டும் நடந்தால் வித்தியாசமான காம்பினேஷனில் உருவாகும் படமாக அமைந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.