'கராத்தே பாபு' என்னும் நான்!.. செம மாஸாக வெளியான ரவி மோகனின் டைட்டில் டீசர்!..

தமிழ் சினிமாவில் தனக்கென கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான இறைவன், சைரன், பிரதர் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
கடந்த வருடம் நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இந்த வருடம் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார் நடிகர் ரவி மோகன். அந்த வகையில் தற்போது டாடா திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தனது 34ஆவது திரைப்படத்தில் கமிட் ஆகியிருந்தார். இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைக்கின்றார்.
முன்னதாக இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது சாம் சிஸ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் பூஜை தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கே.எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேற்று இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக சட்டப்பேரவையில் நடக்கும் காட்சிகளை மையமாக வைத்து டீசர் வெளியாகி இருக்கின்றது. இந்த டீசரில் நடிகர் ரவி மோகன் பேசிய வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
'மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே மாண்புமிகு முதலமைச்சர் மிக அழகாக பேரின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார், அவரின் தமிழ் புலமைக்கு என்றும் தாசனே, அவர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே.. தற்போது என்னுடைய பெயருக்கு வருவோம்.
உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது. 17 வருடங்களுக்கு முன்பு ஆர்கே நகர் மக்களால் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் அது. அந்தப் பெயரை தான் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். அது கராத்தே பாபு என்னும் நான்..' என்று வசனங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.