பழைய ரூட்டுக்கு மாறிய சிம்பு!.. புது பட அறிவிப்பு செம மாஸ்... இயக்குனர் யார் தெரியுமா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:52  )

Actor simbu: வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர்தான் சிலம்பரசன். ரசிகர்கள் சுருக்கமாக எஸ்.டி.ஆர் அல்லது சிம்பு என அழைக்கிறார்கள். சிறு வயதிலியே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டதால் சினிமாவில் எல்லா ஏரியாக்களிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். கதை, திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாம் சிம்புவுக்கு தெரியும்.

அதேநேரம் ஓவர் பில்டப் கொடுத்து ட்ரோலில் சிக்கிய முதல் நடிகர் இவர். விரலில் வித்தை காட்டி கிண்டலுக்கு உள்ளானார். ரஜினியை போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டு ஓவர் டோஸ் பில்டப் செய்வார். அது எல்லாமே கிண்டலடிக்கப்பட்டது. அதேநேரம் ஒரு கட்டத்தில் அந்த சேஷ்டைகளை நிறுத்திவிட்டு ஒழுங்காக நடிக்க துவங்கினார்.

சிம்பு வாலை சுருட்டிக்கொண்டு இயக்குனர் சொல்வதை கேட்டு நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார், சில நாட்கள் வரவே மாட்டார், தயாரிப்பாளரிடம் அதிக சம்பளம் கேட்டு பிரச்சனை செய்வார் என சிம்பு மீது பல புகார்கள் உண்டு.

ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்துவிடுவார். விண்ணை தாண்டி வருவாயா, மாநாடு படங்கள் சிம்புவுக்கு கம் பேக் படங்களாக அமைந்தது. இப்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதேநேரம், சிம்பு அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் என்கிற அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான், டிவிட்டரில் கடந்த 19ம் தேதி தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணை தாண்டி வருவயா.. நண்பா அடுத்து..’ என பதிவிட்டு அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், டேய் 2k கிட்ஸ், 90 ஸ் மூட்ல நாளைக்கு மாலை 6 மணி 6 நிமிடத்தில் ஷார்ப்பா வரேன்’ என நேற்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.

இந்த படத்தை கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இது சிம்புவின் 49வது திரைப்படமாகும். விரலில் வித்தை காட்டுவதை பல வருடங்களாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார் என்பது சிம்பு வெளியிட்டுள்ள போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

Next Story