ஹீரோ சூரியோட நெக்ஸ்ட் பட 'இயக்குநர்' யாருன்னு பாருங்க!

by ராம் சுதன் |

வெண்ணிலா கபடி குழு படத்தின் வழியாக காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி தொடர்ந்து ஏகப்பட்ட வேடங்களில் காமெடி நடிகராக கதகளி ஆடினார். சற்றும் எதிர்பாராத விதமாக இயக்குநர் வெற்றிமாறன் அவரை விடுதலை 1 படத்தின் வழியாக நடிகராக அறிமுகம் செய்தார்.

ஆரம்பத்தில் பெரிதாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத இப்படம் இளையராஜா இசை, விஜய் சேதுபதியின் வில்லன் நடிப்பு ஆகியவற்றால் கவனம் பெற்று ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றது.

தற்போது இப்படத்தின் 2-வது பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தின் வழியாக கவனம் பெற்ற சூரி தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இதில் கடந்த ஜூன் மாதம் வெளியான கருடன் வசூல் மற்றும் வரவேற்பு ஆகியவற்றில் எந்தவொரு குறையும் வைக்கவில்லை. சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி என சூரிக்கு துணையாக முன்னணி நடிகர்களும் கைகொடுக்க இப்படம் ஓடிடியிலும் நல்ல கவனம் பெற்றுள்ளது.

இதனால் சூரியில் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லவொரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில் சூரியின் புதிய படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. புரூஸ்லீ இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனிமேல் முழுநேர ஹீரோவாக சூரி வலம் வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story