Srikanth: சிகரமா இருந்தாலும் அந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டா? பாலசந்தர் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஸ்ரீகாந்த்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:12  )

Srikanth:இன்று தமிழ் சினிமாவை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இவர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் பாலச்சந்தர். இவருடைய அறிமுகத்தில் எத்தனையோ பல நடிகர் நடிகைகள் இந்த சினிமாவில் வந்திருக்கின்றனர். அவர்களில் பலர் இன்று உச்சம் தொட்ட கலைஞர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

இவருடைய காலத்தில் இவருடைய படைப்புகளில் வெளியான அத்தனை படங்களும் ஒரு காவியமாகத்தான் பேசப்பட்டன. ரஜினி கமல் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளை வைத்தும் பாலச்சந்தர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கமல் நடிப்பில் வெளிவந்த உத்தமவில்லன் திரைப்படம் தான் .இந்த நிலையில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என நடிகர் ஸ்ரீகாந்த் சொன்ன சம்பவம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. அதுவும் ஸ்ரீகாந்த் ஆரம்பகட்டத்தில் வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயம்.

அந்த நேரத்தில் தான் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அது ஹிந்தியில் சக்க போடு போட்ட ஏக் துஜே கேலியே படத்தின் இரண்டாம் பாகம். ஆனால் ஸ்ரீகாந்தை பொருத்தவரைக்கும் அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டால்தான் நல்லது. அதை இரண்டாம் பாகம் என எடுத்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அது ஒரு காவியம். அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம் ஸ்ரீகாந்த்.

அதைப் போல மாதவன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ரன். முதலில் நடிக்க வேண்டியது ஸ்ரீகாந்த்தானாம். ஆனால் அவருடைய ஒரு கொள்கையின் காரணமாகத்தான் ரன் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போனது என்று ஒரு பேட்டியில் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

Next Story