நீங்க ஹீரோ மட்டுமில்ல!.. சூர்யாவிடம் சொன்ன ரஜினி!.. இது செம மேட்டரா இருக்கே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:26  )

சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். சில வருடங்கள் சாக்லேட் பாயாக நடித்தார். அதன்பின் பாலாவின் நந்தா, பிதாமகன், கவுதம் மேனனின் காக்க காக்க படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார்.

தனுஷை போலவே ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள். ஒரு பக்கம் மசாலா கமர்ஷியல் படங்கள் என பயணித்து வருகிறார். மற்ற நடிகர்களை போலவே இவரும் நிறைய வெற்றி தோல்விகளை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த படமெடுக்கும் நடிகர் இவர்.

சூர்யாவின் 2டி பிலிம்ஸ் நிறுவனம் பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. ஒருபக்கம் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்தும் வருகிறார். தனது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் கல்வி போன்ற நல்ல விஷயங்களுக்காக ஒதுக்குகிறார்.

அவரோடு சேர்ந்து அவரின் தம்பி கார்த்தியும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து காட்டினார் சூர்யா. அதன்பின் எதற்கும் துணிந்தவன் என்கிற மசாலா படத்தில் நடித்தார். அதன்பின் கடந்த 2 வருடங்களில் அவரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதற்கு காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இது ஒரு சரித்திர கதை கொண்ட திரைப்படமாகும். மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கி பல மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். வருகிற நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான புரமோஷன் விழாவில் பேசிய சூர்யா ‘20 வருடங்களுக்கு முன்பு ரஜினி சாருடன் விமானத்தில் சென்ற போது ’நீங்கள் ஹீரோ மட்டுமில்லை. நல்ல நடிகரும் கூட.. எனவே, வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்கக் கூடாது’ என சொன்னார். அது என் மனதில் பதிந்துவிட்டது. அதனால்தான், சிங்கம் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறேன். ஜெய்பீம் போன்ற கதைகளிலும் நடிக்கிறேன். ரசிகர்களும் என்னிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story