Surya: உள்ள போயாச்சு கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்... பாலிவுட் என்ட்ரியா?.. சூர்யா கொடுத்த அப்டேட்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:30  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து கூறும் விதமாக இருந்தது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சூர்யாவுக்கு மட்டுமில்லாமல் சிறுத்தை சிவாக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது கங்குவா தான். இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருப்பதாகவும், இரண்டு பாகங்களையும் சிறுத்தை சிவா எடுத்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சூர்யா இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இது ஒரு பீரியட் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கின்றார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ்-ஆக உள்ளது. தற்போது வரை 400 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள்.

இருப்பினும் படத்தின் மீது படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. தற்போது படக்குழுவினர் தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனென்றால் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் முப்புரமாக படம் குறித்து பிரமோஷன் செய்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யாவும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். பல youtube சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து வருகின்றார். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பாலிவுட்டில் நடிப்பது குறித்து பேசி இருந்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது 'நாங்கள் தற்போது மும்பைக்கு குடியேறி இருக்கின்றோம். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து நான் சொல்வதை காட்டிலும் தயாரிப்பாளர் சொன்னால் சரியாக இருக்கும்.

விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்' என்று தெரிவித்தார். ஏற்கனவே நடிகர் சூர்யா ஹிந்தியில் கர்ணா என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அது மட்டும் இல்லாமல் தூம் 4 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் மூலமாக நடிகர் சூர்யா ஹிந்தியில் அறிமுகமாக இருக்கின்றார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Next Story