இனிமே விஜயெல்லாம் நம்பர் ஒன்னு இல்ல.. சம்பளத்தில் அடிச்சு தூக்கிய பிரபல நடிகர்…
Vijay: தென்னிந்திய சினிமாக்களில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகராக இருப்பது தற்போது தளபதி விஜய் தான். இந்த இடத்தை தற்போதைய பிரபல நடிகர் ஒருவர் தட்டிச் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் பயணத்தை தொடங்கியதிலிருந்து ரொம்பவே சிரமப்பட்டு தான் தற்போது இருக்கும் இடத்தை பிடித்தார். அதிலும் முதலில் வெறும் காதல் மன்னனாகவே விஜய் ரசிகர்கள் அடையாளப்படுத்தினர். பகவதி திரைப்படத்தின் மூலம் தான் விஜய் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்தார்.
அதை தொடர்ந்து அடிக்கடி ஆக்சன் திரைப்படங்களின் நடிப்பதை வாடிக்கையாக்கி கொண்டார். இருந்தும் விஜய் கமர்சியல் நாயகனாகவே கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து படம் எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பதை விட வசூல் எந்த குறையும் இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமே பல இடமும் இருக்கிறது.
இதனால் தான் விஜயின் கடைசி சில படங்களில் அவருடைய சம்பளம் கூடி கணக்குகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மாஸ்டர் படத்தில் தொடங்கிய இந்த கணக்கு சமீபத்தில் முடிந்த கோட் திரைப்படம் வரை ஒவ்வொரு படத்திற்கும் ஐம்பது கோடிக்கும் அதிகமாக அவருடைய சம்பளம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.
கடைசியாக லியோ திரைப்படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியான கோட் திரைப்படத்தில் 250 கோடியும் விரைவில் வெளியாக இருக்கும் தளபதி 69 திரைப்படத்தில் 275 கோடியும் சம்பளமாக பெறப்பட்டிருக்கிறார் என்ன தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விஜய் தற்போது நீடித்து வருகிறார். இந்நிலையில் இந்த இடத்தை பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் தட்டி பறித்திருக்கிறார். புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு சம்பளமாக 300 கோடி வரை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.