லோகேஷ் என்ன கூப்பிடவே இல்ல!.. வான்டடா போய் கேட்டேன்.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?..

by ramya suresh |
லோகேஷ் என்ன கூப்பிடவே இல்ல!.. வான்டடா போய் கேட்டேன்.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?..
X

நடிகர் விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகன் என்று அனைத்து ஜானர்களிலும் அசத்தக்கூடிய ஒரு நடிகர். தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் போதும் என்று நடிக்கக்கூடிய ஒரு நடிகர்.

சமீப காலமாக தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார். மாஸ்டர் தொடங்கி ஜவான் திரைப்படம் வரை வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்துள்ளது. தொடர்ந்து இவருக்கு ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் விஜய் சேதுபதி.

இதனை தொடர்ந்து கடைசியாக நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் தனது 50 வது படமான மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்திருந்தது. மகாராஜா திரைப்படம் தமிழ் மொழி தொடங்கி ஜப்பான் வரை சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றது.

விடுதலை 2 திரைப்படம்:

மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். விடுதலை படத்திற்கு கிடைத்த வெற்றியால் இப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் சூரியை விட நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இதற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக இறங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் நடிகர் விஜய் சேதுபதி.

மாஸ்டர் திரைப்படம்:

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியை அழைக்கவே இல்லையாம். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க தன்னிடம் லோகேஷ் கனகராஜ் கேட்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

தன்னை வில்லனாக நடிக்க வைக்க அவரிடம் ஐடியா இருந்த போதிலும் தன்னிடம் எப்படி கேட்பது என்கின்ற தயக்கத்தில் இருந்திருக்கின்றார் லோகேஷ் கனகராஜ். இதனை ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி தானாகவே சென்று லோகேஷ் கனகராஜிடம் இது குறித்து கேட்க பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பத்து நிமிடம் கதை கூறியதாக தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு இப்படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு ஆசை இருந்ததாகவும், தயக்கத்துடனே இருந்த எனக்கு அதை எக்ஸ்பீரியன்ஸ் செய்ய வேண்டும் என்கின்ற ஆசை இருந்ததால் நான் ஓகே சொல்லிவிட்டேன் என்று அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தனக்கு வில்லனாக நடிப்பதற்கு எந்த தயக்கமும் இல்லை, தயக்கம் இருந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன் என கூறி இருக்கின்றார்.

Next Story